பெரியாரும் தமிழ் இலக்கியங்களும்

– முனைவர் இரா.மணியன் எம்.ஏ., பிஎச்.டி., பி.ஓ.எல்., பி.டி., ஆய்வுக்குரிய இக்கட்டுரையாளர் சீரிய பெரியார் பற்றிய சிறந்த சிந்தனையாளர். அவரது இலக்கிய ஆய்வுப் படைப்பு இது. – ஆசிரியர் உலக மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் கருத்துகளை வழங்கிய உலகப் பேரறிஞர்கள் பலருள்ளும் பெருஞ்சிறப்பினைப் பெற்று விளங்குபவர் தந்தை பெரியார் ஆவார். உலகிற் சிறந்த பேரறிஞர்களான சாக்கிரடீசு, வால்டேர், ரூசோ, காரல் மார்க்ஸ், இங்கர்சால், லெனின் ஆகிய பெருமக்களின் ஒட்டுமொத்தக் கூட்டுச் சிந்தனையாளராகத் திகழ்ந்தவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி […]

மேலும்....

தமிழின் பிள்ளைகள் – சி.இலக்குவனார்

சி.இலக்குவனார் மலையாளம்: மலையாளம் என்ற சொல் தமிழ்ச் சொல்லேயாகும். மலையிடத்தை ஆட்சியாகக் கொண்டது என்னும் பொருளதாகும். மலையாளம் என்ற சொல் மொழியைக் குறிக்கும். கேரளம் என்ற சொல் நாட்டைக் குறிக்கும். இச்சொல் சேரலன் என்ற தமிழ்ச் சொல்லின் வேறு வடிவமேயாகும். சவுக்குப் போலியாகக் க வருவது இயல்பு. சீர்த்தியே கீர்த்தியாகவும், செம்பே கெம்பாகவும் (கன்னடத்தில்) உருமாறியுள்ளமையைக் காண்க. மலையாள நாடு தமிழிலக்கியங்களில் சேரநாடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையாண்ட அரசர்கள் சேரர் என்றும் சேரலர் என்றும்அழைக்கப்பட்டனர். சேரன் செங்குட்டுவன், […]

மேலும்....

காடுகளை அழிக்கலாமா? – திரு.வி.க

பண்டை நாளில், தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லப்படுவோர், பெரிதும் விவசாயத்தில் தம் வாழ்க்கையை நடாத்தி வந்தனர். இவர்க்கு வாழ்வை நல்கவல்ல விவசாயத்துக்கெனச் சிறப்பாக என்னென்ன முயற்சிகள் இப்பொழுது செய்யப்படுகின்றன? தொழில் இலாக்காவாலும், விவசாய இலாக்காவாலும், விவசாயக் கல்லூரிகளாலும் விவசாயம் வளம்பெற்று விடுமோ? அவைகளால் ஏழை மக்கள் குறைகள் நீங்கிவிடுமோ? விவசாயத்துக்கு இன்றியமையாதன காடுகளும், கால்நடைகளும், பிறவுமாம். காடுகளுக்குற்ற கட்டுப்பாட்டை நான் விரித்துக்கூற வேண்டுவதில்லை. காடுகளுக்குக் கட்டுப்பாடு விதித்து விட்டால், அவை நாடுகளுக்கு – விவசாயி களுக்கு _ […]

மேலும்....

பழந்தமிழ் – மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்

“செந்தமிழ் என்று பெயரிட்டு அழைக்கப்பெறும் தமிழ் மொழியின் இலக்கியத் தமிழ், திராவிடப் பழங்குடியினர் வழங்கிய தொன்மொழியின் நிலையினைத் தெளிவுற உணர்த்துகிறது என்று சிலர் கருதுகின்றனர். செந்தமிழின் பெருமதிப்பைக் குறைத்துக் கூறாமலே திராவிட மொழியின் தொன்மை நிலையைத் தெளிவுறக் காட்டும் கண்ணாடியாம் தனித் தகுதி எம்மொழிக்கும் இல்லை என்றே நான் கருதுகின்றேன். இன்று வழக்கிலிருக்கும் அனைத்து மொழிகளின் ஒப்பீட்டு ஆராய்ச்சியே அம்மொழிகள் தோன்றத் துணைபுரிந்த திராவிடத் தொன்மொழி வழக்கின் நிலையை உணர்த்தவல்ல நனிமிகச் சிறந்த வழித் துணையாகும். செந்தமிழே […]

மேலும்....

இழிமொழி எது?

– திராவிட மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாண்ர் பிராமணர் தமிழரையும், திரவிடரையும் போல இந்தியப் பழங்குடி மக்களல்லர். அவர் கிரேக்க நாட்டையடுத்த மேலை ஆசியாவினின்று பாரசீக வழியாக இந்தியாவிற்குள் புகுந்தவர். அவர் முதன் முதலாகக் குடியேறிய சிந்துவெளி நாடும் அவர்க்குத் தொன்றுதொட்டு உரியதன்று; அது முகஞ்சொதரோ – அரப்பா நாகரிகத்தை வளர்த்த முதுபழம் திரவிட மக்களது. ஆரியர் சிறுபான்மையராய் இருந்தமையான், இந்தியாவிற் குடியேறிய உடனேயே மாபெரும்பான்மையரான பழம் திரவிட மக்களுடன் கலந்து நாளடைவில் தம் முன்னோர் மொழியை மறந்துவிட்டனர். […]

மேலும்....