கொள்கை விழா!

தந்தை பெரியார் தனது பிறந்த நாள் ஒவ்வொன்றையுமே தனது கொள்கை யைப் பரப்பும் நாளாகத்தான் கொண்டாடுவார். அவரது தொண்ட ருக்கெல்லாம் தொண்டர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் அப்படியே. பிறந்தநாள் என்றாலே யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கியே இருந்த ஆசிரியர் 75 ஆவது பிறந்தநாளில் தான் தொண்டர்களின் அன்புக்கட்டளைக்கு ஆட்பட்டார்.

மேலும்....

தர்மபுரி

பாலன் பொறந்தமண்ணில்பழியொண்ணுபடிஞ்சிருச்சே! அப்பு ஒழச்சமண்ணில்அநியாயம்நடந்திருச்சே! சாதிவெறி பாம்பு வந்துசடக்குன்னுகொத்திருச்சே! சிறுகுஞ்சப் பருந்து வந்துதிடுக்குன்னுஎத்திருச்சே! கல்லூடு கட்டுறதுஒங்ககண்ணுக்குப்பொறுக்கலியோ! கல்லூரி செல்லுறதுஒங்ககருத்துக்குஒறுக்கலியோ! அகம் புறமாவாழ்ந்தஇனம்அடிபட்டுச்சாகுதே குறுந்தொகையபடிச்ச மனம்இடிபட்டுவேகுதே! எரிச்சவுக மூளையிலஎருக்குமுளச்சிருக்கோ! இடிச்சவுக கைகளிலஎலந்தகௌச்சிருக்கோ! எதுல ஒசத்தின்னுஎனக்கெடுத்துச்சொல்வீரோ! எதுத்தா பேசுறன்னுஎன்னையுந்தாகொல்வீரோ! அடங்கமறு காலத்துலஅடக்கி விடமுடியாது! அத்துமீறதுணிஞ்சுபுட்டாஅடிதடிக்குமுடிவேது! ஊரு திருந்தாமஉருப்படவேமுடியாது! சாதி ஒழிக்காமதமிழிருட்டுவிடியாது! – அறிவுமதி(நன்றி : குமுதம்)

மேலும்....

நீர்ப்பறவை : சொல்லப்படாத வாழ்க்கை

தேசிய விருது பெற்ற `தென் மேற்குப் பருவக் காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் படம் `நீர்ப்பறவை. மீனவர்களின் வாழ்க்கையைக் கதைக்களமாகக் கொண்டு வந்த படங்களில் இந்த நீர்ப்பறவைக்கு முதலிடம் கொடுக்கலாம். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிய அடையாளமே இல்லாத உடைதாங்கிய எம்.ஜி.ஆரின் படகோட்டி போல இல்லாமல், ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வை அந்த மண்ணிலேயே படம் பிடித்துள்ளார் இயக்குநர். மிக மிக ஆபத்து நிறைந்த தொழில் கடலில் மீன் பிடித்தல்தான். எப்போது திரும்பி வருவார்கள் என்பது தெரியாமலேயே காத்திருத்தல் […]

மேலும்....

முற்றம்

இணையதளம் www.thoguppukal.wordpress.com தமிழ் எழுத்தாளர்கள் 794 பேர்களின் படைப்புகள்; அறிவியல், அறிஞர்கள், இசை, இலக்கியம், இலக்கணம் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள்; பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள் தொடங்கி தற்கால இலக்கியப் படைப்புகள் வரை நீண்ட தொகுப்புகள் என பரந்து விரிந்த படிப்புலகத்தைப் பக்கங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தளம் இது. ஒவ்வொருவரின் படைப்பையும் தேடித்தேடிப் படிக்கவேண்டிய வாசகர்களின் சிரமத்தைக் குறைத்து ஒரே தளத்தில் பெரும்பகுதிப் படைப்பாக்கத்தைத் தந்திருப்பது சிறப்பு. மொழிப்பயிற்சிப் பகுதி இன்றைய வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் […]

மேலும்....

கனவு காண்பவன்

சாவதற்குள் தன் செருப்பை ஆளச்செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒருவன் நடு ரோட்டில் வந்து கூச்சலிட்டான் அடுத்த முதலமைச்சரை தன் சுட்டு விரல் சொல்லுமென்று அன்றிலிருந்து அவன் காதுகள் கனவு கண்டன அவன் இமைகள் கனவுகண்டு நீ சொன்னதுதான் நடக்குமென்றது வாய் மூக்கு தோள் எல்லாம் கனவு கண்டு சொன்னது அவன் அமைச்சர் பட்டியலின் பெயரை டிக் செய்தான் அவனுக்கு வயிற்றின் மீது கோபம் வந்தது அதற்கு கனவு காணத் தெரியவில்லையென்று ஓங்கி குத்தினான் கண்ணாடியை பார்த்தான் மீசையை […]

மேலும்....