பெண்மையைப் போற்றும் பெருமகன்!

– திருமகள் எனக்கு அமைந்த முதல் ஊர்தி வாழ்விணையர் அவர்கள்தான். அந்த ஊர்தி இருக்கிற காரணத்தால்தான் எனது இலட்சியப் பயணம் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. எங்களுடைய தேனிலவு எல்லாம் தந்தை பெரியாருடைய பிரச்சாரப் பயணமே தவிர வேறு எதுவும் கிடையாது. நானோ ஒரு காட்டுச் செடி போல இருந்தவன். அவர்களோ குரோட்டன்ஸ் செடி போன்றவர்கள். நான் எவ்வளவு துன்பத்தைத் தாங்குகிறேனோ அந்த துன்பத்தை அவர்கள் தாங்கித் தாங்கிப் பழக்கப்படுத்தும்படியாக ஆக்கப்பட்டு விட்டோம் என்பது இருக்கிறதே அப்படிப்பட்ட […]

மேலும்....

ஒரு துளிச் சந்தேகமும் இல்லை

– டாக்டர் கலைஞர் எனக்கு, என்னுடைய ஆட்சிக்கு நான் எடுத்து வைக்கின்ற சாதனைகளுக்கு எதிர்ப்புகள் எங்கிருந்து தோன்றினாலும், அந்த நேரத்திலே மனம் சற்று சலிப்புறுமேயானால், அந்தச் சலிப்பை நீக்குகின்ற மாமருந்தாக எனக்குத் தோன்றுகின்ற இப்பெரியார் திடல், திருச்சியில் பெரியார் மாளிகை, வீரமணி அவர்களுடைய உருவம் இவர்களெல்லாம் நமக்காக இருக்கும்போது திராவிட இயக்கம் நம்மைப் பெற்றெடுத்த வீடு! திராவிட இயக்கம் நாம் தவழ்ந்து வந்திட்ட தாழ்வாரம்! திராவிட இயக்கம் நம்முடைய கைவேல்! திராவிட இயக்கம் நமக்குக் கவசம்! திராவிட […]

மேலும்....

டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

அம்பேத்கர் தழுவிய பவுத்தம் எது?     – கி.வீரமணி நமது நாட்டில் புத்தரையே கடவுளாக்கி விட்டார்கள். புத்த நெறியைப்பற்றிச் சொல்லும் பொழுது என்ன சொன்னார்கள்?  முதலில் `தரவாடா என்ற ஒரு நெறி. தரவாடா என்றால் ஹீனாயானம். அதாவது சிறிய  வண்டி. பெரிய வண்டி என்பது மாதிரி வைத்துக்கொள்ளுங்கள். மற்றொன்று மகாயானம். கடவுள் அவதாரக் கதையெல்லாம் இதற்குள் நடுவில் சேர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கொள்கைகள் மாறுபட்டன. திரிபுவாதங்களைச் செய்தார்கள். மூன்றாவது `வஜ்ராயானா. அம்பேத்கர் அவர்கள் தழுவிய […]

மேலும்....

எதிர்கொண்ட அறைகூவல்கள்

அரசியல்வாதிகள் அன்றாடம் எதிர்கொள் ளும் அறைகூவல் இயல்பானது. ஆனால் சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் _அதாவது சவால்கள் அப்படியல்ல; வேறு பாடானவை. தந்தை பெரியார் என்னும் மாபெரும் சமூக அறிவியலார் எதிர்கொண்ட சந்தித்த அறைகூவல் களை அவருடைய அடித்தோன்றல் அண்ணாவோ, அண்ணாவின் அரசியல் வாரிசு கலைஞரோ சந்திக்கவில்லை எனலாம். ஆனால்,அந்தவகையில் தந்தை பெரியாரின் அடியொற் றியே நடைபோடும் அவருடைய இயக்க வழித் தோன்றல் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்திக்க நேர்ந்தது இயற்கையான வியப்பின் வெளிச்சக்குறி. ஆம்! […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் . . .

அம்மாவின் பயணம் தொடங்கியது புறப்பட்டு விட்டேன் என்று அறிவு ஆசானின் வாரிசான அன்னையார் என்ற நமது புறநானூற்றுத்தாய் அறிக்கை எழுதி, புயலெனக் கிளம்பி, பெரியாரின் சுற்றுப்பயணம் நிற்காது; காரணம் பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தத்துவம் என்பதாய் அதை முழங்கிட ஆயத்தமாகி விட்டார். பொதுச் செயலாளரான நானும் அய்யாவின் அடிச்சுவட்டில் நடைபோட்டு, அம்மாவின் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டேன். சுற்றுப் பயணத்தில்  இருந்தவாறே விடுதலை நாளேட்டிற்கு நாளும் தலையங்கம் எழுதியும், கழகத் தலைவர் அன்னையார் எழுதித் தந்த அறிக்கைகளையும் அனுப்பி […]

மேலும்....