அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்… கேரளாவில்

கேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்து கோவில்களின் அர்ச்சகர் பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களை பார்ப்பனர் அல்லாதோரை நிரப்ப தேவஸ்தானம் முடிவு செய்து ஒரு பெரும் மாற்றத்திற்கு வழி கோலியுள்ளது. திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்டு கேரளாவில் 2,000 கோவில்கள் உள்ளன. கடந்த 6 மாதத்திற்கு முன்பு அர்ச்சகர் பணியிடங்களுக்கான நேர் காணல்கள் அனைத்து ஜாதியினரைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கும் நடத்தப்பட்டு, 199 அர்ச்சகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் பார்ப்பனர் அல்லாதோர் ஆவர் என தேவஸ்தான […]

மேலும்....

பக்தியின் பலன்

சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏப்ரல் 6 அன்று நடந்தது. பக்திப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடியபடி லட்சுமியை தரிசித்துக் கொண்டிருந்தபோது, 10 பெண்களின் 85 சவரன் தங்க நகைகளை திருடர்கள் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனராம்.பாவம் போக்க வந்த இடத்தில் பவுனைப் பறிகொடுத்துள்ளனர் பக்தைகள். ஸ்ரீ லட்சுமி அம்மன் தனது பக்தைகளின்  உடைமைகளைக் காக்க எதுவும் செய்யவில்லையாம்.காவல் துறையினர்தான் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும்....

ராமன், கிருஷ்ணன் பற்றி எம்.ஜி.ஆர்

ம்.ஜி.ஆர்.கோடம்பாக்கம் ஹைரோடு வழியாக ஸ்டூடியோவுக்குப் போகும் போது பலமுறை சர்ப்ரைஸாக எங்கள் வீட்டுக்கு வருவார். அப்படி ஒரு நாள் அவர் கிருஷ்ண ஜெயந்தியன்று வந்திருந்தபோது, எங்கள் வீட்டு வாசலில் தொடங்கி, பூஜை அறை வரை நெடுக கிருஷ்ணர் பாதங்கள் வரைந்திருந்தோம்.உள்ளே நுழைந்ததும்

மேலும்....

உலகப்பகுத்தறிவாளர்கள்

கோபராஜு ராமச்சந்திர ராவ் எனும் கோரா – 2

மாட்டுக்கறி ‍- பன்றிக்கறி விருந்து

– சு.அறிவுக்கரசு

மசூலிப்பட்டினம் கல்லூரியில் பணியாற்றிய போது அறிவியல் கண்காட்சி நடத்தினார். டார்வினின் பரிணாமக் கொள்கையை விளக்கிடும் படிமங்களை அமைத்தார். பார்த்த மாணவர்கள் தெளிவு பெற்றனர். அறிவியல் மனப்பான்மை பெற்றனர். திருஷ்டித் தேங்காயை உடைத்துத்  தின்னும் அளவுக்குத் தெளிவு பெற்றனர்.

மேலும்....

ராமனே உடைத்த ராமன் பாலம் ‍

– மணிமகன்

லைவாணர் என்.எஸ்.கே.அவர்கள் பாடிய பாடல் ஒன்றை உடுமலை நாராயணகவி எழுதியிருப்பார்.

நெனச்சதை எல்லாம் எழுதி வச்சது அந்தக் காலம்…அது அந்தக் காலம்

எதையும் நேரில் கண்டே நிச்சயிப்பது இந்தக் காலம்..ஆமா இந்தக் காலம்

வேறு ஊடகங்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் கற்பனைச் சிறகைத் தட்டி எழுப்பி அன்றைய மக்களின் பொழுது போக்குக்காகவும்,

மேலும்....