எண்ணம்

இன்றைய புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்ப்போர்ட், ஒரு தேசிய கீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவையாக இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டி இருக்கிறது. – கவிஞர் சேரன்,ஈழப் பேராசிரியர், கனடா   ஒபாமாவும் சரி, குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களும் சரி போர் வெறி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்கின்றனர். இதனால் அமெரிக்க மக்கள்  வெறுத்துப் போய் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் இரண்டு தரப்புக்கும் […]

மேலும்....

நிகழ்ந்தவை

இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்களில் இந்தியாவும் தாய்லாந்தும் ஜனவரி 25 அன்று கையெழுத்திட்டன. புதுவை மாநிலத்தின் மேனாள் முதல் அமைச்சரும், தற்போது கேரளா ஆளுநருமான பரூக் மரைக்காயர் ஜனவரி 26 அன்று மரணமடைந்தார். மணிப்பூரில் ஜனவரி 27 அன்று நடைபெற்ற தேர்தலில் 82 சதவீத ஓட்டுப் பதிவானது. துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர். இஸ்ரோ மேனாள் தலைவர் மாதவன் (நாயர்) பாட்னா அய்.அய்.டி.நிர்வாகக் குழு பதவியை ஜனவரி 28 அன்று ராஜினாமா […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

சுயமரியாதை வீரரான  சிவகங்கை ராமச்சந்திரனாரை காங்கிரசில் சேருமாறு சத்தியமூர்த்தி (அய்யர்) வலியுறுத்தியபோது, நீங்கள் பூணூலை அகற்றினால் காங்கிரசில் சேருகிறேன் என்று முகத்திலடித்தாற்போல் பதில் தந்தார் என்ற வரலாறு  உங்களுக்குத் தெரியுமா?   உணவுப் பஞ்சம் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப இந்தியாவில் உணவு, தண்ணீர், ஆற்றல் ஆகியவற்றின் உற்பத்தி இல்லை. 2030ஆம் ஆண்டில் தற்போது உள்ளதைவிட அதிகமாக 50 சதவிகித உணவு, 30 சதவிகித தண்ணீர், 45 சதவிகித ஆற்றல் தேவைப்படும். 2040ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை […]

மேலும்....

அதிகரிக்கும் செல்பேசி

2011 டிசம்பரில் செல்பேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 89.38 கோடி. நவம்பரில் 88.43 கோடி. எண்ணை மாற்றாமல் விரும்பிய நிறுவனம் மாறியோர் 2.92 கோடி என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) என்று அறிவித்துள்ளது. செல்பேசி என்பது இன்று மனிதனிடமிருந்து பிரிக்க முடியாத சாதனங்களுள் ஒன்றாகிவிட்டது. எந்த இடத்தில் இருந்தாலும் தொடர்பு கொண்டு செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க பெரிதும் பயன்படுகிறது. செல்பேசி பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. எனினும், நம்மில் எத்தனை பேர் செல்பேசியிலுள்ள நாள்காட்டியைப் (Calendar) பார்த்து […]

மேலும்....

சிறுகதை – ஆறிவிடும் மனக்காயங்கள்

– அப்ரேனிபுரம் பால்ராசய்யா அன்னூர் அரசுப் பள்ளிக்கூடத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் வசந்த குமார். சினிமா தியேட்டரில் பலநாட்கள் ஓடிய திரைப்படம் இன்றே கடைசி என்பதைப்போல அன்னூர் அரசுப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க வருவது இன்றே கடைசி என்ற முடிவோடு புத்தகப்பையை அலட்சியமாகப் பார்த்தான். கணக்கு வாத்தியார் தம்பிதுரை இனி வீட்டுப்பாடம் ஏன் பண்ணிக்கிட்டு வரலையின்னு ஸ்கேலால் மணிக்கட்டில் அடிக்க மாட்டார். சந்தோஷம் டீச்சர் டிக்டேசன் போட்டு தவறாக எழுதும் வார்த்தைகளுக்கு நூறு தடவை எழுதச்செய்யும் தண்டனை வேலை […]

மேலும்....