ஆசிரியர் பதில்கள்

கேள்வி : தந்தை பெரியார் கேட்ட திராவிட நாடு கிடைத்திருந்தால், இன்றைக்கு நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா? – காழி கு.நா.இராமண்ணா, சென்னை பதில் : வரலாற்றில் இப்படி நடந்திருந்தால் என்ற வாதத்திற்கே இடம் கிடையாது. இது மட்டுமா? எத்தனையோ பிரச்சினைகள் தலைவலிகள் எழாதே! சுண்டைக்காய் இலங்கை ஈழத்தமிழர் வாழ்வுரிமையை எப்படி கேள்விக் குறியாக்கியுள்ளது. அந்நிலை ஏற்பட்டிருக்குமா? இப்படி பல விடைகள் சொல்லலாம். ஆனால் அது நடைமுறைக்கு எந்த அளவுக்கு உதவும் என்றும் […]

மேலும்....

காதல் திருமணங்கள் வளரட்டும் – தந்தை பெரியார்

இங்குக்  கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்கு முன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகிறேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்லப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்திவிட்டுப் பிறகு கூட்டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன். இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணைவர்களாக ஏற்றுக் கொள்ளும் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்திருமணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன்னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகிறேன். இம்மணமக்கள் இருவரும் […]

மேலும்....

கடவுள் வாழும்(?) கோவிலிலே…

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணையில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இரவுக் காவலரைக் கட்டிப் போட்டுவிட்டு 3 கிலோ வெள்ளி நகைகள், உண்டியல் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன. நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி பகுதியில் வசித்த மணிகண்டன், சுசீந்திரத்தை அடுத்த வண்டி குடியிருப்புப் பகுதியிலுள்ள அம்மன் கோவில் விழாவுக்குச் சென்றபோது சாமி வந்து ஆடி அருள்வாக்குக் கூறியுள்ளார். அப்போது திடீரென கொதிக்கும் வெந்நீரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஜெயங்கொண்டத்தைச் […]

மேலும்....

நூல் அறிமுகம்

நூல்: தொலைக்காட்சி தொழில்நுட்பம் ஆசிரியர்: தமிழ்தாசன் வெளியீடு: சாஃப்ட்வியூ பதிப்பகம், 118, நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, சென்னை -_ 29. தொலைப்பேசி: 044_2374 1053 மொத்தப் பக்கங்கள்: 80, விலை ரூ.60/- கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்து, மனித வாழ்வில் பிரிக்கமுடியாத ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகத் திகழும் தொலைக்காட்சியில் நாம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குமுன் நடைபெறும் செயல்முறைகள் விளக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்ட முறையினைக் கூறி, அதன் படிப்படியான வளர்ச்சி நிலைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்த அனலாக் தொழில்நுட்பம் […]

மேலும்....

இதயம் இதயமாய் இயங்க…

பேராசிரியர் மருத்துவர் வெ.குழந்தைவேலு இதய நோய்கள் உடலின் அனைத்துப் பகுதிகளின் உறுப்புகளை நோக்கிலும் உயிர் வாழ்க்கைக்கு இதயமே இன்றியமையாத செயலினை ஆற்றவல்லதாகும். அப்படிப்பட்ட இதயமானது பல்வேறு காரணங்களால் பாதிப்பிற்குள்ளாகலாம்.எடுத்துக்காட்டாக, பிறப்பிலேயே தோன்றும் இதயக் குறைபாடுகள் ஊனங்கள் (congenital heart diseases/anomalies); முடக்குவாத நோய் தொடர்புடைய பாதிப்புகள்; வால்வு பாதிப்புகள் (rheumatic heart diseases; valve diseases); பால்வினை நோயான வெட்டை நோயின்பாற்பட்ட மாதமனியின் நீண்டகால அழற்சி பாதிப்பு (chronic syphilitic aortitis; valvular damage and coronary […]

மேலும்....