தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா? – டான் அசோக்

தமிழர்கள் யாவரும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய தெளிவின்மையோடு, எதை நம்புவது எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பத்தில்  சிக்கியுள்ளார்கள். தமிழக மக்கள் இந்த விசயத்தில் எக்காரணம் கொண்டும் தெளிவுபெற்றுவிடக் கூடாது என்பதில் இப்போது ஆட்சியில் இருப்போரும், அவர்க்கு அறிவுரை வழங்கி வரும் கூட்டமும்  மிகத்  தெளிவாய் இருக்கிறது. அதன்படி தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய்  கலைஞர் அறிவித்ததை மாற்றி மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக  அறிவித்துள்ளது தற்போதைய தமிழக அரசு. இந்நிலையில் எதற்காக தமிழர்கள் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : இனி பாடல்கள் எழுத மாட்டேன் என்று ஆங்கிலேயரிடம் கையெழுத்துப் போட்டுவிட்டு புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வந்து வாழ்வைத் தொடங்கினாராமே பாரதியார், இது உண்மையா? – (புகழ்ச்செல்வி, நவ. 2011 இதழ்) – தி.இரமணன், காஞ்சி பதில் : எனக்கு இது சரியான தகவலாகத் தெரியவில்லை. ஆய்வு செய்து பார்த்தே பதில் அளிக்க இயலும். கேள்வி : நடப்பு நிதி ஆண்டில் உணவுப் பொருள் அறுவடையின் உற்பத்தி அதிகரித்ததால் 12%ஆக இருந்த உணவுப் பணவீக்கம் தற்போது 6.6%ஆக […]

மேலும்....

புரட்சிக் கவிஞரின் சிந்தனைப் பொறிகள்

விஞ்ஞானியும் -பார்ப்பானும்! ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சிசாலையில் கண்டறிந்த உண்மையானது, மறுநாளே, விளையாட்டுச் சாமான் செய்யும் தொழிலாளி யையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக்கும்படி மேல்நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது. நமது நாட்டிலோ கோவில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப்பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக்கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு. – அரிது! அரிது!! ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு […]

மேலும்....

நெசந்தானுங்க..

எது ஓடியதோ… “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… எது ஓடியதோ அதுவும் நன்றாகவே ஓடியது… எது படுத்ததோ அதுவும் நன்றாகவே படுக்கும்ங்கிற மாதிரி ஒரு ரெண்டு டயலாக்கை வச்சுக்கிட்டு காலங்காலமா ஒரு புத்தகத்தை ஓட்ட முடியுமா அப்படின்னு ஆச்சரியப்பட்டா, முடியும்கிறதுக்கு விடைதான் கீதை. கடமையைச் செய்; பலனை எதிர்பாராதேன்னு கல்லாப்பெட்டியில உட்கார்ந்திருக்கிற முதலாளி, தன்னோட தொழிலாளிகளுக்குச் சொல்ற மாதிரி ஒரு ஸ்டிக்கரை ஒட்டி வச்சிருப்பாரு தலைக்குமேல! அடடடா! அந்த வாசகத்தை வச்சிக்கிட்டு இவனுங்க போடுற ஆட்டம் […]

மேலும்....

வலிக்கிறது அவனுக்கும்…

– வீர.தமிழன் செருப்பால் அடிப்பேன்என்று யாரோ யாரையோதிட்டுகிறபோது ஏனோசெருப்பால் அடித்ததுபோல்வலிக்கிறதுசெருப்புத் தைக்கும் தொழிலாளிக்கும்! எல்லாபேருந்து நிறுத்தங்களுக்குஅருகிலேயும்பழைய கீற்றுகளாலோகோணிப் பைகளை ஒன்று சேர்த்தோவேயப்பட்டிருக்கிறதுஒரு தாழ்வாரம்! திரைப்பாடல்களுக்குமுந்தையவானிலை அறிக்கையைவாசித்துக்கொண்டிருக்கிறதுஒரு வானொலி! இருக்கை போட்டுஉட்காரச் செய்யவோஎழுந்து நின்றுஉங்களை வரவேற்கவோஒருபோதும்முடியாது அவனால்! அவன் அலுவலகத்தில்செருப்பைஉள்ளே விட்டுவிட்டுநீங்கள்வெளியே வந்து நிற்க வேண்டும்! அது ஆய்கையால் தொடக்கூடாதுஎன செருப்பை எடுத்துவிளையாட முயற்சிக்கும்போதெல்லாம்தன் பேரக்குழந்தைகளுக்குஅறிவுறுத்தத் தவறாதசில பெருசுகள்,தைத்து முடிந்த பிறகுஎவ்வளவு என்றே கேட்காமல்போனால் போகட்டும் வைத்துக்கொள்என்பதுபோல்கொஞ்சம் சில்லறைகளை மட்டுமேதந்துவிட்டுநைசாக நழுவிக் கொள்ளும்போதுவாயடைத்து வெறிக்கத்தான்முடிகிறது இவனால்! படத்தில்வாளேந்தி நிற்கும்மதுரை […]

மேலும்....