திருக்குறள் துளிகள்

திருக்குறள் பெரும்பிரிவு பால் எனவும், சிறுபிரிவு இயல் எனவும் அதற்கும் சிறுபிரிவு அதிகாரம் எனவும் பெயர் பெற்றுள்ளது. திருக்குறள்  அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது. அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது. திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன. திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் […]

மேலும்....

கடவுள்களின் தலை எழுத்து!

முருகனும் – கணபதியும்: (பிரமனை நோக்கி) அண்டசராசரங்களையும் படைத்த பிரம்ம தேவரே! யானை முகத்தையும் ஆறுமுகத்தையும் தாங்கிக் கொண்டு நாங்கள் படும்பாடு உமக்குத் தெரியாதா? ஏனிந்த சிரமம் எங்களுக்கு? பிரமன்: மைந்தர்காள்! உங்களுக்குத்தானா அந்தக் கஷ்டம்? என்னைப் பாருங்கள், – நான்கு தலைகளும் எட்டுக் கைகளுமாக நானுந்தான்…. என்ன செய்வது? எல்லாம் தலை எழுத்தப்பா, தலை எழுத்து! – திராவிட நாடு – 17.3.1946

மேலும்....

பொங்கல் பற்றி அண்ணா

ஒரு கலை விழாவாக, ஒரு பண்பாட்டு விழாவாக தமிழகத்திலே நடத்தப்படுவது பொங்கல் விழா. உழவர் திருநாள் இப்பொங்கல் புதுநாள் என்பதை அனைவரும் இன்று அறிந்து போற்றுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சங்கராந்திப் பண்டிகையாகவும் சூரிய நமஸ்காரப் பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி, இதுபோது, அறுவடை விழா என்றும், உழவர் திருநாள் என்றும், தமிழர் விழா – திராவிடர் திருநாள் என்றெல்லாம் ஏற்றம் பெற்று விளங்கிடக் காண்கிறோம். எல்லாப் பண்டிகைகளும் நம்மைப் பிற இனத்தாரின் எடுபிடிகளாக்குவதற்கே பெரிதும் பயன்பட்டு […]

மேலும்....

தமிழ்ப் புத்தாண்டு : சங்க இலக்கியமும் அறிஞர்களும் சொல்வதென்ன?

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுப் பிறப்பாக பல்லாண்டு காலமாகக்  கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு அறிஞர்கள் தக்க சான்றுகளாகத் தந்துள்ளனர். இரண்டாயிரம் (2000) ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் இதற்குச் சான்றுகள் உள்ளன. தைஇத் திங்கள் தண்கயம் படியும்  என்று நற்றிணையும் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் என்று குறுந்தொகையும் தைஇத் திங்கள் தண்கயம் போல் என்று புறநானூறும் தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ  என்று கலித் தொகை யும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புச் சிறப்பிடம் […]

மேலும்....

கடவுள் வாழும்(?) கோவிலிலே…

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் சுற்றுச் சுவர், அகழியின் பக்கச் சுவர்களில் வளர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொல்பொருள் துறை ஊழியர் பழனி (48) பிடித்திருந்த சுவரின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்ததில்  உயிரிழந்தார். சென்னை, கொருக்குப்பேட்டை பாரத்நகர் தெருவில் உள்ள வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்திலிருந்த சங்கிலி, உண்டியல் பணம் மற்றும் கோவிலின் உள்ளேயிருந்த ரூ.25,000 மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை, அம்பத்தூர் ஆசிரியர் காலனி அண்ணா தெருவில் வசிக்கும் […]

மேலும்....