முகநூல் பேசுகிறது

கவரிமான் இருப்பது உண்மையா? கவரிமான் என்றொரு மான் வகையே கிடையாது. இமயமலையில் இருக்கும் ஒரு வகைக் காட்டு மாடு, சடைமுடியுடன் இருக்கும். கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடுங்குளிரில், பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு, உடம்பில் மயிரை இழந்துவிட்டால், குளிரில் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடும். இதைத்தான் திருவள்ளுவர், மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா என்கிறார். மற்றபடி கவரிமான் அல்ல அது. அன்னப்பறவை போல, நாமாக உருவாக்கிய ஒரு உயிரினம்தான் கவரிமான். –  […]

மேலும்....

கடவுளைக் களவாடும் களவாடும் கபோதிகள் யார்?

1983 -இல் காசி விசுவநாதர் கோயில் திருட்டுப்பற்றி பிரபலமாகப் பேசப்பட்டது. காசி விஸ்வநாதர் கோவிலில் திருட்டு, சிவலிங்கம் பதிக்கப்பட்ட அடித்தளத்தில் உள்ள 2 கிலோ தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. திருடர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிடிபட்டார்கள். மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் பல்பீங்சிங்பேடி கோவிலின் உள்ளே இருப்பவர்கள் உதவி இல்லாமல் வெளியிலிருந்து வந்து திருட முடியாது என்று கூறுகிறார். திவாரி என்ற பார்ப்பனர் கோவிலில் ஒரு மகன்ட். மகன்ட் […]

மேலும்....

குருமூர்த்தியின் சுதேசி வியாபாரம் – சு.அறிவுக்கரசு

பார்ப்பனர்களின் பாதுகாவலனாகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் மூதறிஞர் சோ.ராமசாமியின் இந்த இதழில் ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். எழுதியவர் எஸ்.குருமூர்த்தி என்பார். பிராமணதர்மம் பிறழாமல் _புரோகிதம் பார்ப்பதற்குப் பதில் பெரு முதலாளிகளின் கள்ளக்கணக்குப் பேரேடுகளைப் புரட்டிக் காசு பார்ப்பவர். ஆர்.எஸ்.எஸ்.காரர். அதன் ஆக்டோபஸ் கரங்களில் ஒன்றான சுதேசி ஜாக்ரான் மஞ்ச்சின் தலைவர். அதாவது உள்நாட்டுப் பொருள்களை மட்டுமே வாங்கவேண்டும், விதேசிப் பொருள்களை வாங்கக்கூடாது எனப் பிரசங்கம் செய்பவர். இதற்காக ஒரு முறை மதுரை மூதூருக்குப் போய்க் கல்லூரி மாணவர்களை […]

மேலும்....

முற்றம்

நூறு வயதைத் தாண்ட நடைமுறைகள் ஆசிரியர்: ச.சு.மகாலிங்கம்பக்கங்கள்:    144 ரூ.40வெளியீடு:    மனசாட்சிக் கூடம்,89/44, மூன்றாவது தெரு,கருணாநிதி நகர், தண்டையார்பேட்டை, சென்னை-_-81. என்னதான் துன்பங்களை அனுபவித் தாலும், மனிதன் நீண்டநாள் வாழ ஆசைப்படுபவன் தான். அந்த ஆசையை நிறைவேற்ற ஆலோசனை சொல்லுகிறார் இந்நூல் ஆசிரியர். இலக்கியம், வரலாறு, அன்றாட உலகச்செய்திகள், அறிவியல் ஆய்வுகள் என பல தகவல்களிலிருந்து எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார். உழைப்பும் தன்னம்பிக்கையும் ஆயுளை நீட்டிக்கும், உணவு முறை, நூறு வயது கடந்து வாழும் மனிதர்கள் போன்றவை […]

மேலும்....

எதிர்க்கதை

கோலம் குமுதம் 11-7-2012 இதழில் வெளியான முதல் மாணவிஎன்ற பிற்போக்குச் சிந்தனைக் கதைக்கு எதிர்வினையாய் எழுந்த சிந்தனை பள்ளி வளாகம் களைகட்டியிருந்தது. நடந்து முடிந்த +2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பெற்றாள் கஸ்தூரிபாய் மேல்நிலைப் பள்ளி மாணவி அர்ச்சனா. பாராட்டு விழா! மாவட்ட கல்வி அதிகாரி மணிமேகலை காரில் வந்து இறங்கினார். மாணவ மாணவிகள் இருபுறமும் வரிசையில் நின்று கைதட்டி வரவேற்றனர். காரை விட்டு இறங்கிய மணிமேகலையை வாசலில் போடப்பட்டிருந்த கோலம் ஈர்த்தது. ஒருசில […]

மேலும்....