அறிவுக்குப் பொருந்தா செயல்தான் செய்தே…

ஆண்டவன் பெயரைச் சொல்லிச் சொல்லிச்அறிவுக்குப் பொருந்தா செயல்கள் செய்வார்உதட்டை நாக்கை உடலுறுப்பைகம்பிகளாலே குத்திக்குத்தி கொள்வார்நெருப்பின் மீதே நடந்து செல்வார்எல்லாம் இறைவன்செயல் என்பார்கிளியின் உத்தரவைபெற்றே தான்காரியமாற்றப் புறப்படுவார்மனிதநேயம் மறந்திடுவார்மதப்பிடிதனிலே வாழ்ந்திடுவார்இலவசமாய் செருப்புகிடைத்துவிட்டால்காலை செருப்பிற்கேற்றாற் போல்கனப்பொழுதினிலேவெட்டிக் கொள்வார்சிந்தனை யற்ற செயல்களாலேஉயிரைக் கூட இழந்திடுவார்சலனம் அடையும் மனிதனுக்குசாந்தப்படுத்திடசோதிடம் சொல்வார்மூன்றாம் பிறவி செயல்களுக்குஇந்தப் பிறவியில் வகை காண்பார்அடிமைத்தனத்தைஏற்றுக் கொள்வார்அச்சம் கொண்டே வாழ்ந்திடுவார்புதுமை அறிந்திட மறுத்திடுவார்புவியில் மருண்டே வாழ்ந்திடுவார்அறிவு ஆசான் பெரியாரின்ஆற்றல் நிறைந்த வழி தன்னைஆய்ந்தே நீயும் ஏற்றுக் கொண்டால்அகிலத்தில் நீயும் முழு மனிதன் […]

மேலும்....

புதுப்பாக்கள்

நடக்கும் நம்புங்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை. நடக்கட்டும் நம்புகிறோம் என்பது நாத்திக நம்பிக்கை. திருவிழாவில் அம்பாளின் அருள்கிடைத்து விடும் என்பது பக்தையின் நம்பிக்கை. கூட்டத்தில் எப்படியும் தங்கத்தாலியை அறுத்து விடுவோம் என்பது திருடர்களின் நம்பிக்கை. கருவறையே ஆனால் என்ன? அந்த கடவுள் வரமாட்டான் என்பது காஞ்சிபுரம் தேவநாதனின் நம்பிக்கை. – ப.நாகராஜன், பன்னத்தெரு.   அவர்களே மகான்கள்! எதையுமே துறவாமல்…முற்றும் துறந்தவராய்…நடிக்க…மகான்களால் மட்டுமேமுடியும்!… நடிகைகளைத்தொட்டுப் பேசரசிகனுக்கு மட்டுமாஆசை?மகான்களுக்கும்கூடத்தான்!ரசிகர்களால் முடியாது!காவல்துறைவிரட்டி, விரட்டி அடிக்கும்! ஆனால்…மகான்களால் முடியும்!காவல்துறையின்ஒத்துழைப்போடு!! இந்த அற்புதம்(!)செய்வதால்தான்அவர்கள் […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1)    1933இல் நாகம்மையாரின் இறப்புச் செய்தி பற்றி பெரியாருக்கு எந்த ஊரில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது? அ) ஈரோடு  ஆ) ஜோலார்பேட்டை  இ) மயிலாடுதுறை  ஈ) தஞ்சாவூர் 2)    “கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்கால்களுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிப்பிட்ட ஒரு மரப்பட்டை இவற்றோடு  ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்துகொண்டிருக்கிறார். தண்டனை அடைந்த சாதாரண கைதி எவ்வளவு  வேலை செய்வானோ அது […]

மேலும்....

நாத்திகமே இறுதியில் வெல்லும்!

வலது கை இட்ட திருநீற்றை, பொள்ளாச்சி கழக மேடையிலே இடதுகையால் அழித்தது, வெறும் கைத்தட்டலுக்குத் தான் என்பதைப் பகுத்தறிவுப் பாசறை முன்னமேயே உணரும். கண்ணதாசன் ஒரு க்ஷண சித்தன் _ ஒரு க்ஷணப்பித்தன் என்பதையும் நாடிபிடிக்காமலே சொல்லும் தொலைநோக்கு, பெரியார் தொண்டர்களுக்கு உண்டு. ஆத்திகப் போர்வை போர்த்தி பழங்குப்பை களை அர்த்தமுள்ள இந்துமதமாக்கி, மூடநம்பிக்கைகளுக்கு தலைப்பாகை கட்டி, ராஜகிரீடமும் புதுபாஷ்யம் சிருஷ்டித்த கொடுமைக்கு அவரது தமிழ் துணை போனதுதான் கொடுமையிலும் கொடுமை. எட்டி உதைத்த சங்கரமடம், கட்டிப் […]

மேலும்....

கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க… – 4

படைப்பு என்னும் அயோக்கியத் தனம் வளர்த்த கிடா மார்ல பாய்ஞ்ச கதையாகல்ல இருக்கு ஊர் பக்கம் நன்றி மறந்தவர்களை குறித்து இப்படி கூறுவதுண்டு. ஒருவருடைய முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்து, பின்னர் நாம் புறக்கணிக்கப்படும் சூழல் வரும் பொழுது இந்த சலிப்பு ஏற்படக்கூடும். ஏறி வந்த ஏணியை எட்டி உதைச்சுட்டான்யா..என்று கூட நாம் சில நேரங்களில் வருந்துவதுண்டு. அப்படியான ஒரு சூழல்தான் கடவுள் கற்பனைகளும், அது நம்மை படைத்தது என்று நம்பிக் கொள்வதும், மனிதனுக்கான கடவுளர்கள் காலம், காலமாக […]

மேலும்....