சுதந்திரமான உழைப்பே பெண்மையின் பொங்கல் – பிரதிபா

எனக்கும் ஒரு ஆசைங்க.. என்னதான் சராசரி மனிதப் பிறவியா நாம இருந்தாக்கூட மற்றவங்க நம்மள நல்லவங்கன்னு சொல்லணும்ங்கிற எதிர்பார்ப்பு இருக்கும். அடுத்தவர் பாராட்டுக்கும் பெருமைக்கும் ஆசைப்படக்கூடாதுன்னு எவ்வளவுதான் நினைத்தாலும் ஆசை விடமாட்டேங்குது.  ஒவ்வொரு நாளும் நானும் என்னெவோ செய்து பார்க்கிறேன். ஆனால் பாராட்டு மட்டும் வரவேயில்லை. ஒருநாள் நானே வெறுத்துப்போய் இதோடு இந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கணும், சும்மா பாராட்டு பத்தியே நினைச்சுட்டு இருக்கக்கூடாது என நினைத்து அன்றோடு ஆசை என்கிற தட்டைக் கழுவி […]

மேலும்....

உண்மையான சுதந்திரம்?

நாட்டில் நாம் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டியுள்ளது; அந்த மாற்றம்,இந்தியாவின் 80 சதவீத மக்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் கைகளில் உண்மையான சுதந்திரத்தை ஒப்படைத்து, அதனை வலுப்படுத்த வேண்டும். நமது நாட்டின் பத்துக் கோடி பேர் –  பல நூற்றாண்டுகளாகப் பலவித கொடுமைகளுக்காளானவர்கள் _ இன்றும் தாழ்த்தப்பட்டோர் என்ற பெயரால் மோசமான நிலையிலேயே உழன்று கொண்டிருக்கின்றனர். மற்ற ஏழுகோடி பேர் பழங்குடிகள் என்னும் பெயரால் துன்பமயமான வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களைத் தவிர 12 கோடி […]

மேலும்....

அறிவியலும் மூடநம்பிக்கையும்

– நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியவை அல்ல. பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால்தான் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 2 மடங்காக உயர்ந்துள்ளது. சுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக்கையின் அடிப்படையில்  பார்க்காமல் அறிவியல் பூர்வமாகப் பார்க்க வேண்டும். ஜோதிடமும், செம்பைப் பொன்னாக்கும் வித்தையும் கருத்தாற்றலை மட்டுமே நம்பியுள்ள வெறும் புரட்டு.  ஒரு நல்ல […]

மேலும்....

செய்திக்கூடை

துனிசியா நாட்டில் ஏற்பட்ட புரட்சியால் அதிபர் சைனி எல் அபிதின் அரசு பதவி விலகி எள்ளை என்ற இஸ்லாமிய கட்சியின் தலைமையில் அரசு அமைக்கப்பட்டுள்ளது. மனிதனின் செயல் இழந்த மூளைக்கு எலட்ரோடு எனப்படும் பேஸ்மேக்கர் கருவியினைப் பொருத்தி இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். சென்னை – வண்டலூரில் உள்ள மிருகக் காட்சிசாலை பற்றிய விவரங்களை www.aazoopark.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இயற்பியலுக்கான நோபல் பரிசினை 2009ஆம் ஆண்டு பெற்ற தமிழர் வெங்கட ராமகிஷ்ணனுக்கு இங்கிலாந்து […]

மேலும்....

காலம் மாறினாலும் – கோவி.லெனின்

சுருக்கம் விழுந்த தோலாய் இருந்தாலும் முத்தம்மா கிழவியின் வருடல் இனியனுக்கு இதமாக இருந்தது. பத்து வயதாகும் இனியன் முதன்முதலாக தன் கொள்ளுப்பாட் டியைப் பார்க்கிறான். அவன் அப்பா கதிரவனுக்கு ஹைதராபாத்தில் சாஃப்ட்வேர் துறையில் வேலை. அம்மா கலைச்செல்விக்கும் அதே துறைதான். அதனால், தாத்தா, பாட்டி, கொள்ளுப்பாட்டி என்று யாரையும் பார்க்க சொந்த ஊருக்கு வந்ததில்லை. கொள்ளுப்பாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் என்பதால் முதல் முறையாக தன் அம்மா அப்பாவோடு இப்போதுதான் திருவாரூருக்கு வந்திருக்கிறான். அதுவும் இந்த நடுராத்திரி […]

மேலும்....