எண்ணம்

அடிப்படையில் இங்கு பிரச்சினைக்குக் காரணம் என்னவென்றால், ஜாதிய அமைப்பு. இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமே ஜாதியில் சிக்குண்டு கிடக்கிறது. அந்தச் ஜாதிதான் ஜனநாயகம், அரசியல், ஆட்சி இயந்திரம் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ஜாதிய அமைப்பு, நிலப்பிரபுத்துவ முறையில் இருந்து கார்ப்பரேட் முறைக்கு மாறி இருக்கிறது. இங்கு ஊழலை எல்லோரும் நோயாகத்தான் பார்க்கிறார்கள். அது ஒரு நோயின் அறிகுறிதான். உண்மையில் நோய் எது என்றால், சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு. இந்தியாவில் இன்றைக்குப் பணமோ, அதிகாரமோ […]

மேலும்....

நிகழ்ந்தவை

ஜூலை 27 அன்று இலண்டனில் 30 ஆவது ஒலிம்பியாட் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. 204 நாடுகளிலிருந்து 10,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஜூலை 29 அன்று கர்நாடக மாநிலம் மங்களூரில் விடுதி ஒன்றில் பிறந்தநாள் விருந்தில் பங்கேற்ற 13 மாணவிகள் மற்றும் மாணவர்கள் மீது இந்துத்துவ அமைப்பான, இந்து ஜன ஜாக்ரான் வேதிகா அமைப்பினர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதையொட்டி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். […]

மேலும்....

அலையாத்தி மனம்

சுனாமி என்ற வார்த்தையை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் நாளுக்கு முன்னர் நாம் கேள்வியே பட்டதில்லை. ஆனால் அந்த பேரழிவிற்குப் பின் மிகப் பெரிய பிரச்சினைக்கு சுனாமியை எடுத்துக்காட்டாகக் கூறுவது வழக்கமாகி விட்டது. அதன் பின்னர் இப்போது 2011 டிசம்பர் 30 ம் நாள் சுழன்றடித்து சூறையாடிய ‘தானே’ புயல் தன் ‘சக்தி’ எப்படிப்பட்டது என்பதை சொல்லிவிட்டது.   ஆண்டு தோறும் பருவ மழைக் காலங்களில் தென்மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வப்போது தமிழ்நாட்டிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

மேலும்....

அறிவியக்க முதல்வர் அண்ணல் புத்தர் ‍

புத்தர் இப்படியா போதித்தார்? கடந்த 1-_ஜூலை 2012 உண்மை இதழில் வெளிவந்துள்ள, மணிமகன் அவர்களின் சிங்கள மயமாக்கத்தில் சிக்கிய புத்தர் என்னும் கட்டுரையில் ஓர் அருமையான கருத்து இடம் பெற்றுள்ளது.

மேலும்....

உருப்போட்டு மார்க் வாங்குவது தகுதி திறமை ஆகிவிடுமா?

சர்க்கார் பரீட்சை தேர்வு முடிவுகளைத் தெரிவிக்கும் சர்ட்டிஃபிகேட் (நற்சான்று பத்திரங்)களில் சர்க்கார் (முடிவை வெளியிடும்) இலாகாதாரர்கள் – பாஸ் ஃபெயல் (Pass – Fail) தேர்வு பெற்றார் – தேர்வு பெறவில்லை என்பதான இரண்டு சொற்களில் ஒன்றைத்தான் எழுதுவேண்டுமே ஒழிய மார்க்கு (குறியீடு) எண்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதாக அரசாங்கத்தார் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

மேலும்....