பெரியார் ஒப்படைத்த பெரும்பணி

– நக்கீரன் கோபால் பெரியார் இல்லையென்றால் இந்த இனத்திற்கு விடுதலை என்பது இல்லை. அவர் நடத்திய விடுதலை, குடிஅரசு போன்ற பத்திரிகைகள் இல்லையென்றால், எங்கள் நக்கீரன் போன்ற மக்களின் குரலாய் ஒலிக்கும் பத்திரிகை உருவாகியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறியதே. ஆதிக்கசக்திகளை எதிர்த்து நின்று பெரியார் தன்னுடைய பத்திரிகைகளை நடத்தியதால் ஏற்பட்ட தாக்கமும் விளைவுமே இன்று எங்கள் நக்கீரன் இலட்சக்கணக்கான வாசகர்களுடன் எளிய மக்களின் குரலாய் ஒலிக்கிறது. ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாக நிற்கிறது. சவால்களையும் சங்கடங்களையும் துணிவுடன் எதிர்கொள்கிறது. […]

மேலும்....

கருத்தாளர்-எழுத்தாளர்-தொகுப்பாளர்

விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பல தொகுப்புகள், கட்டுரைகள் நூல்களாக வெளிவந்து பல்லாயிரக் கணக்கில் விற்றுத்தீர்ந்துள்ளன. இன்றளவும் ஆய்வுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் படிக்கப்படுகின்றன. அவற்றில் சில பற்றி இக்கட்டுரையாளர் விளக்குகின்றார். *** சக்தி வழிபாடு என்ற நூல் மெக்காலிஸ்டர் எழுதிய ‘A Century of Excavation in Palestine’,, இல்லஸ்டிரேட்டட் வீக்லி இதழில் குஷ்வந்த சிங் எழுதிய, தாந்தீரகக் கலையும் அதன் குறிகளும் ஏ.வி.ஜெயச்சந்திரன் எழுதிய சக்தி ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு கி.வீரமணி இந்நூலினை எழுதியுள்ளார். […]

மேலும்....

சிறைக் கைதிக்கு இருக்கும் விடுதலை படிக்கும் ஆர்வம்!

பாளையங்கோட்டையில் ஆயுள் கைதியாக இருந்த தோழர் ஒருவர் அக்டோபர் 1980ல் எழுதிய ஒரு மடல். எனது பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு மானமிகு தம்பி அ.பக்கிமுகம்மது எழுதும் விவரம். வணக்கம். அய்யா, நான் ஆயுள் தண்டனையில் இருக்கிறேன். 12 வருஷம் ஆகிறது: அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூபாய் 15 அனுப்பி இருக்கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். […]

மேலும்....

விடுதலை வளர்ச்சியில் ஆசிரியர்!

– புலவர் குறளன்பன் எழுச்சிப் பெரியாரின் இனமானப் பணியில் முழுநேரத் தொண்டனாகத் தன்னை இணைத்துக் கொண்ட ஆசிரியர் வீரமணி எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் விடுதலைக்கும் – இயக்கத்திற்கும் ஏற்றம் தந்தது. விடுதலை _இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றதும் ஆசிரியர் வீரமணி அவர்கள் முதல்வேலையாக முகவர்களிடமிருந்து விடுதலைக்கு வந்து சேரவேண்டிய நிலுவைத் தொகைகளைக் கேட்டு வழக்கு எச்சரிக்கை அறிக்கை வழி மீள வழிவகுத்தார். நிருவாக ஓட்டைகளை அடைத்து சிக்கனத்தை அறிவுறுத்தி நிமிர்த்தினார். தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மலர்களை […]

மேலும்....

விடுதலை “லை”

விடுதலை என்றதும் எனது பள்ளி மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நிழலாடுகின்றது. அப்பொழுது நான்  அரசு உயர்நிலைப் பள்ளியில் அய்யங்கார் பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் நன்றாகப் படிக்கக் கூடியவள்; ஆசிரியரால் பாராட்டப்பட்டவள்.   செய்தித்தாள் பற்றிய கட்டுரை ஒன்று எழுதச் சொல்லியிருந்தார் எனது தமிழ் அய்யா. நானும் கட்டுரை எழுதி இன்று நம் நாட்டில் வெளிவரும் செய்திதாள்களின் பெயர்களில் ஒன்றாக விடுதலை என்பதனைக் குறிப்பிட்டு இருந்தேன். எனது தந்தையார், குடும்பம்பற்றி நன்றாகத் தெரிந்த […]

மேலும்....