சர்ச்சை பாபா
மனிதரில் புட்டபர்த்தி சாய்பாபாவும் ஒரு மனிதர்; நமக்கு ஒன்றும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் மனிதராக மட்டுமே இருந்திருக்கவில்லை. பகவானாகவும்(?) இருந்தார். அதனால்தான் சர்வசக்தி படைத்த அந்த பகவானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாமா எனக் கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர் மருத்துவமனை அமைத்தார்;அதில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளித்தார்; இது நல்ல செயல்தான்,வரவேற்கிறோம். ஆனால், இந்த நலப்பணிகள் செய்ய அவர் என்ன செய்து பணத்தை ஈட்டினார்? தன்னைச் சர்வசக்தி உள்ளவராகக் காட்டிக்கொண்டார். அதற்காக சில தந்திரங்களைக் கையாண்டார். அதில் ஒன்று, பகவான் பாபா நோயுற்ற ஒருவரைத் தொட்டார்; அந்த நோயாளியின் நோய் குணமானது என தன் பக்தர்களை நம்பச் செய்தது. இந்தச் செய்தியைப் பரப்பி அப்பாவிப் பக்தர்களைக் கவரும் போதுதான் பகுத்தறிவாளர்கள் கேட்டார்கள். சரி,இது உண்மையானால் சாய்பாபா ஏன் மருத்துவமனை கட்ட வேண்டும்? நோயாளிகளையெல்லாம் வரிசையாக நிற்க வைத்து சாய்பாபா அவர்கள் மீது கையை வைத்தால் போதுமே! நோய் பறந்தோடிவிடுமே!
மேலும்....