குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

சிதம்பரத்தில் சித்திரவதை 08.09.1927 ஆம் தேதி காலையில் 10 மணிக்குச் சிதம்பரத்தில் பார்ப்பனர்கள் வாழும் புதுத் தெருவிற்கு அடுத்த தெருவில் ஒரு யாகம் நடைபெற்றது.  யாகத்தீயில் அவிர்பாகம் செய்ய ஓர் ஆட்டை பார்ப்பனர்கள் எப்படி சித்திரவதை செய்து கொன்றார்கள் என்பதைக் கூறும் கீழ்வரும் நிகழ்ச்சி எல்லோர் மனதையும் கசிந்துருகச் செய்யும்.  அவ்வாட்டின் சித்திரவதையை யாராலும் எடுத்து வருணித்தல் முடியாது.  ஆனால், அந்தக் கூட்டத்திற்குப் போன ஒரு பார்ப்பனன் அக்கூட்டத்திற்குப் போக சம்மதம் கொடாத இன்னொரு பார்ப்பனருக்கு எடுத்துச் […]

மேலும்....

உலகப் பகுத்தறிவாளர்

தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி – சு.அறிவுக்கரசு படைப்பா? மனிதனின் தோற்றம் பற்றிய தனது நூலை சார்லஸ் டார்வின் 1871 ஆம் ஆண்டுவரை அச்சிடவில்லை.  என்றாலும், மனிதனின் தோற்றம் தொடர்பான கொள்கைபற்றிய வெளிச்சம் ஒருநாள் வந்தே தீரும், என்கிற கருத்தைச் சூசகமாக வெளியிட்டார்.  இதைப் பிடித்துக் கொண்ட ரிச்சர்டு ஓவன் – மனிதன் மற்ற பால் குடிக்கும் உயிரிகளைப் போன்றவன் அல்லன், அவனது மூளை அவனை மற்றவற்றிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் – என்று கூறத் தொடங்கினார். இதனை மற்றைய […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : தேர்தல் ஆணையம் வாக்களிக்கப் பணம் கொடுத்தாலும் வாங்கினாலும் சிறை என்று சட்டம் போட்ட பின்பும், கொடுப்பவர்களிடம் வாங்கிக் கொண்டு எங்கள் கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லும் விஜகாந்த்தைத் துணிச்சல்காரர் என்று சொல்வதா?  சட்டம் ஒழுங்கைச் சிதைப்பவர் என்று சொல்வதா?  அல்லது…..  – ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி

பதில் : ஒழுக்கக்கேட்டிற்கு துணிச்சல் என்ற பெயர் உண்டு என்பதை முதல் முறையாக உங்கள் கேள்வி வாயிலாக அறிகிறேன்.

மேலும்....

சமதர்மம்

சமதர்மம் என்றால், சாதாரணமாக மாசற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால், மதக்காரர்களுக்கும், கடவுள் நம்பிக்கை கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி மக்கள் உடல் வருந்தியுழைத்த பின்னும் குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும், குடி இருப்பதற்கு ஓட்டைக் குடிசை கூட இல்லாமல் பரிதவிக்கும் பொழுது எந்தவிதமான வேலையும் செய்யாது, பணக்காரனாக இருக்கிற சந்தர்ப்பத்தில், அக்கிரமமாக – அநீதியாக தொழிலாளிகளைக்

மேலும்....

குரல்

  • உலக மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டும் பிரச்சினைகளில் தன்னுடைய அக்கறையை இந்தியா வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.  வல்லரசாக ஆக வேண்டுமென்றால் தான் நல்லரசு என்பதையும் இந்தியா நிரூபிக்க வேண்டும்.  எனவே, இலங்கை இனப் படுகொலை செய்துள்ளது என்று அய்.நாவின் அறிக்கையில் கூறியிருப்பதுபற்றி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு கண்டிப்பாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.
    – மீனாட்சி கங்குலி மனித உரிமை கண்காணிப்பகத்துக்கான தென் ஆசியத் தலைவர், அய்.நா.சபை
  • சுவிஸ் வங்கிகளில் மற்ற நாட்டுக்காரர்களைவிட இந்தியர்கள்தான் அதிகம் பேர் கருப்புப் பணம் வைத்துள்ளனர்.  கறுப்புப் பணத்தால் ஜெர்மனி அரசைவிட, இந்திய அரசுக்குத்தான் ஏராளமான வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.  இருப்பினும் இந்திய அரசு அக்கறை காட்டவில்லை.
    மேலும்....