குறுந்தொடர் : வஞ்சகம் வாழ்கிறது – 2

(புரட்சிக் கவிஞர் பாரதிதாச்னின் இரணியன் (அல்லது) இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம்)

– எழுதியவர் : ந.சேதுராமன், திண்டிவனம்

 

காட்சி – 3. காட்டின் ஒரு பகுதி

உறுப்பினர்கள்: பொன்னப்பன், சாத்தப்பன், வீரப்பன்.

பொன்: சாத்தப்பா! நம்ம இளவரசர் கூடாரத்துக்குள்ள ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்காரு. நாம காலாற அப்படிப் போய் வருவோமா?

சாத்தப்: என்ன பொன்னப்பா! வீரப்பன் எங்கேயோ போய் இருக்கிறான். நாமும் போய்ட்டா எப்படி?

மேலும்....

புதுப்பாக்கள்

அடுப்பில் தூங்கும் பூனை உழவன் வீட்டில் மிஞ்சியதெல்லாம் உடைந்த சோற்றுப் பானை வாழும் வரைதான் போராட்டம் தன்னைச் சுற்ற பூமி மறந்தால் மண்ணில் சாயும் வேரோட்டம் தொடரும் மனக் கவலை அறுபதாமாண்டு விடுதலை நாளிலும் தொங்கும் இரட்டைக் குவளை ஒன்றாய் இருந்தது ஊர் தெருத்தெருவாய் பிரித்து விட்டது அம்மன் கோவில் தேர் ஆண் ஆளுமை நாடு பெண் பிள்ளை மட்டும் ஈனுகின்ற அரசுத் தொட்டில் கேடு தொடரும் ஆண்டைகள் ஆட்சி எத்தனை கட்சிகள் ஆண்டபோதும் ஏழைக்கு இல்லை […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1.தோழர்கள் கொடுத்த உணவு மிகவும் காரமாகவும் மோசமாகவும் இருந்தால்கூட அந்த உணவை அந்தத் தோழர் முன்னிலையிலேயே உண்பதோடு மிகவும் நன்றாக உள்ளது எனப் பாராட்டுவார் பெரியார். ஏன்?

அ) அவருக்குப் பசி அதிகமாக இருந்ததால் ஆ) அன்போடு கொடுத்த தோழர்கள் மனம் மகிழ்ச்சி அடைய வேண்டுமென்பதற்காக இ) அதிகநேரம் வைத்திருந்தால் மேலும் கெட்டுவிடும் என்பதால். ஈ) மற்றவருக்கு உணவு கொடுக்கும் பழக்கத்தைத் தோழர்களிடம் வளர்க்க

2. ஈரோடு நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பெரியாரின் சமுதாய அந்தஸ்து என்ன?

அ) 29 பொது நிறுவனங்களில் பதவியில் இருந்தார். ஆ) சாதாரணக் குடிமகன் இ) ஆயிரம் வேலி நிலத்திற்குச் சொந்தக்காரர் ஈ) சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் கல் உடைக்கும் வேலை செய்தார்.

3. எனக்குப் பெண்டு பிள்ளை இல்லை; நான் செத்தால் எனக்காக அழக்கூடியவர் பெரியார் மட்டுமே என்று கூறியவர் யார்?

அ) காமராசர் ஆ) புலவர் கோ. இமயவரம்பன் இ) திரு.வி.க. ஈ) முத்துராமலிங்கத் தேவர்

4. காங்கிரஸ் கமிட்டிகள் தீண்டாமையை எதிர்த்து வேலை செய்யலாம் என்ற திட்டப்படி கேரளக் காங்கிரஸ் கமிட்டியின் நேர் பொறுப்பில் தொடங்கப்பட்ட போர் எது?

அ) கல்பாத்தி அக்ரகார நுழைவுப் போர் ஆ) வைக்கம் உரிமைப் போர் இ) அனைவரும் அர்ச்சகர் ஆகும் போர் ஈ) தாய்மொழியில் வழிபடும் உரிமைப் போர்

5. வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டத்திற்காகப் பணம் பெற்றமைக்குச் சரியாகக் கணக்குக் காட்டவில்லை என்று பெரியார்மீது குற்றம் சுமத்திய காங்கிரஸ்காரர் யார்?

அ) சி.என்.முத்துரங்க முதலியார் ஆ) வ.உ.சிதம்பரம் இ) தண்டபாணி பிள்ளை ஈ) சீனிவாச அய்யங்கார்

6. தமிழ்நாட்டில் கதர் இயக்கத்தைப் பலமடையச் செய்தவர் யார்?

அ) தந்தை பெரியார் ஆ) இராசகோபாலாச்சாரியார் இ) பனகல் அரசர் ஈ) கைவல்ய சாமியார்

7. 1922ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் ஈரோடு இல்லத்தில் தங்கிச் சென்ற காங்கிரஸ் தலைவர்…..

அ) பண்டித மோதிலால் நேரு ஆ) வித்தல் பாய் பட்டேல் இ) டாக்டர் அன்சாரி ஈ) மூவரும்

8. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் கருத்தைக் கேட்பதற்கு பெரியாரைக் காந்தி சந்தித்த இடம் எது?

அ) திருவனந்தபுரம் ஆ) அருவிக்குத்தி இ) பெங்களூர் ஈ) கொட்டாரம்

9. ………. எனது நினைவுக்கு வரும்பொழுதும், நேரில் காண நேரும்போதும், இது உலக இயற்கை அல்ல. எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதேயாகும் என்று முடிவு செய்வேன். பெரியாரின் இந்தக் கூற்றில் கோடிட்ட இடத்திற்கான சொற்றொடர் யாது.?

அ) முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்டுவது ஆ) நிலப்பிரபுக்கள் பண்ணையாட்களை நடத்துவது இ) விதவைகள் விஷயம் ஈ) மேல்ஜாதியார் கீழ் ஜாதியாரை ஒடுக்குதல்

10. இளைஞர் மாநாடு, பெண்கள் மாநாடு, மதுவிலக்கு மாநாடு, சங்கீத மாநாடு ஆகியவையும் சேர்த்து நடத்தப்பெற்ற சுயமரியாதை மாநாடு எவ்வூரில் நடைபெற்றது?

அ) செங்கல்பட்டு ஆ) விருதுநகர் இ) ஈரோடு ஈ) புதுச்சேரி

மேலும்....

சிறுகதை – சொல்லாமலே

– மீனாட்சி அன்னம் ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி ஆப்பரேட்டராகப் பணியாற்றி வந்தாள். அவளுடைய அப்பா பாண்டியன் ஒரு வழக்குரைஞரிடம் கணக்கராக வேலை செய்து வந்தார். அவளுடைய அண்ணன் மாணிக்கம் அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவளுடைய அம்மா இலட்சுமி வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தாள். அன்னம் தன்னுடைய வேலையைச் செம்மையாகச் செய்வதில் திறமைமிக்கவளாய்த் திகழ்ந்தாள். அந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இன்று புதிய நிர்வாக அதிகாரி திடீரென்று வருவதாகச் சொல்லியிருந்தார்கள். அன்று […]

மேலும்....

குடிஅரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

எம்.ஏ., எல்.டி உபாத்தியாயரின் கடவுள் பாடம் – தகவல் : மு.நீ.சிவராசன் (1925 மே மாதம் 2 ஆம் தேதி தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட குடிஅரசு எனும் வார இதழ் தமிழ்நாட்டிலேயும்,  தமிழர்கள் வாழும் பிறநாடுகளிலும் சுயமரியாதைப் புயலாய்ச் சுழன்று சுழன்று அடித்தது. அதன் விளைவாக இளைஞர் முதல் முதியோர் வரை கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் வாக்கு ஆகியவற்றைப் பற்றி வினா எழுப்பும் விழிப்புணர்வு ஏற்பட்டது.  அதனால் பள்ளி மாணவர்கள் கூட தங்கள் ஆசிரியர்களிடம் வினாக்களை […]

மேலும்....