சிந்தனைத் துளிகள் – ஜேம்ஸ் ஆலன்

உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான். தீமை என்பது ஓர் அனுபவம்; அது அறியாமையின் நிலையே. அந்த அறியாமை என்ற அனுபவத்தை நீக்க அறிவைத் துணையாகக் கொள்ள வேண்டும். அறிவு வளர வளர தீமை என்ற அறியாமை நீங்கிவிடும். நீ  உள்ளிருந்து விலகி நிற்கப் பயில். உன்னை அந்த வேளையில் ஆராயவும், புரிந்துகொள்ளவும் முயல். மனதை உற்சாகப்படுத்து. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு […]

மேலும்....

குரல்

எத்தகைய குற்றத்தைச் செய்தவராக இருந்தாலும் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை விதிப்பதை நான் எதிர்க்கிறேன். ஏனெனில், அடிப்படையில் நான் ஒரு புத்த மதவாதி. எவ்வளவு தீயவராக இருந்தாலும் ஒரு மனிதனின் உயிரை அரசே பறிப்பது காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளம். இசுலாமியச் சட்டப்படி தூக்குத் தண்டனை அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்ற போதிலும், அந்தச் சட்டமே குற்றம் செய்தவர்களைப் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும் என்று கூறுகிறது. நாமெல்லாம் 21ஆம் நூற்றாண்டுக்கு வந்துவிட்ட நிலையில், சில விசயங்களில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டும். – […]

மேலும்....

பதிவுகள்

மாநிலங்களவை உறுப்பினர் அமர்சிங்கிற்கு டில்லி உயர் நீதிமன்றம் அக்டோபர் 24 அன்று ஜாமீன் வழங்கியது. தனி தெலுங்கானா கேட்டுப் போராடிய அரசு ஊழியர்கள் 42 நாள்கள் வேலை நிறுத்தத்திற்குப் பின் அக்டோபர் 25 அன்று வேலைக்குத் திரும்பினர். வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 45 பேரின் ஜாமீனை நீட்டிப்பு செய்து அக்டோபர் 28 அன்று தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டது. அரசியல் தலைவர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கில் பாகிஸ்தானின் மேனாள் அதிபர் முஷாரப் […]

மேலும்....

வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

  தமிழனின் அடையாளமான வள்ளுவரின் படம் மறைப்பு, தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்ததன் வெற்றிவிழாவாக நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டு இலட்சினை மறைப்பு, கல்வி நிலையங்களுக்கு புத்தகங்கள் தர மறுப்பு, தற்பொழுது இந்தியாவிலேயே அதிநவீன வசதி கொண்ட தமிழறிஞர் அண்ணாவின் பெயர்தாங்கிய நூலகம் அழிப்பு………. அட…. அட…அட… தமிழர்களுக்கு எதிராக சிங்களவன் என்னென்ன செய்தானோ அதையெல்லாம் செய்தாயிற்று!!! என்னை ஆட்சியில் அமர வைத்த தமிழக மக்களுக்கு மிக்க மிக்க நன்றி…. சுகுமாரன், நவம்பர் 2, 2011, மாலை 6.14 புத்த […]

மேலும்....

பயங்கரவாதிகள் அல்ல

அய்ரோப்பியக் கொள்கைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகக் கருத முடியாது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் உள்நாட்டுப் போரில்தான் ஈடுபட்டு வந்தனரே தவிர சர்வதேச ரீதியான போரில் ஈடுபட்டதில்லை. இதன்மூலம் அவர்கள் மீது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளைச் சுமத்தலாமே தவிர அவர்களைப் பயங்கரவாதிகள் என்று கருத முடியாது. – நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகர நீதிமன்றம்   திருக்குறள் படித்த விக்டோரியா மகாராணியார் விக்டோரியா மகாராணியார் விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள். […]

மேலும்....