குடியரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

தரகு வேலை பார்க்கும் பார்ப்பனர்கள் (சென்னை சட்டசபை அங்கத் தினரும், உப தலைவருமான திருமதி. டாக்டர். முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபையில் தேவதாசி ஒழிப்புக்கு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது.  மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச் செய்தால் அதற்கு என்ன தண்டனை ஏற்படுத்தவேண்டும் எனவும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அவ்வமயம் இரண்டு தேவதாசிப் பெண்கள் இச்சட்டத்தால் தங்கள் பிழைப்பு நின்றுவிடும் என்று எதிர்ப்பிரச் சாரம் செய்தனர்.  அவர்கள் பார்ப்பனர் களின் […]

மேலும்....

உலகப் பகுத்தறிவாளர்

தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி எனும் உயிரியல் அறிவியலறிஞரை சார்லஸ் டார்வினின் புல்டாக் (BULL DOG) என்பார்கள்.  புல்டாக் எனும் பெயருள்ள நாய் பருத்த உடலும் முரட்டுப் பார்வையுமாய், பார்ப்பவர்களைப் பயமுறுத்தும் தோற்றம் கொண்டது.  பரிணாமத் தத்துவத்தை முதன்முதலில் அறிவித்த சார்லஸ் டார்வினுக்கு மதவாதிகளால் எதிர்ப்புத் தோன்றியபோது, அவர்களை எதிர்த்து வாதிட்டு வென்ற பெருமைக்குரியவர் ஹாக்ஸ்லி.  தமது கருத்தை வலிமையுடன் விளக்கி, வாதாட டார்வின் தயங்கிய போது அவருக்குத் தோள்கொடுத்த தோழர்.  1825 இல் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : உலகில் எவ்வளவோ பிரச்சினைகளை அமர்ந்து பேச நேரமில்லாத போது கிரிக்கெட்டைப் பார்க்க மூன்று நாட்டுப் பிரதமர், அதிபர், குடியரசுத் தலைவர்கள் அமர்ந்து பார்ப்பது சரியா?  இவ்விளையாட்டிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

-சி. இரமேசு, பெரியக்கோட்டை

பதில் : சிக்கலான மில்லியன் டாலர் கேள்வி இது!  உயர்மட்ட – உயர் ஜாதியினர் விளையாட்டு. எனவே, இதற்குத் தனி மவுசு போலும்!  இதே ஆர்வம் மற்ற விளையாட்டுகளுக்கும் தரவேண்டாமா?

கேள்வி :: நாட்டின் முதுகெலும்பும், உண்மையான பொருளாதாரமுமான விவசாயம் நலிவதும், விவசாயம் சாராத பூமிக்குக் கேடு விளைவிக்கும் மாற்றுத் துறைகளின் வளர்ச்சி அதிகரிப்பதும், எதிர்காலத்தில் பூமியில் உயிர் வாழும் உயிரினங்களுக்கும், பொருளாதாரத் திலும் எந்த மாதிரியான குழப்பங்கள் ஏற்படுத்தக்கூடும்? பொருளாதாரத்திலும் புலமை பெற்ற தங்களின் கருத்து என்ன?

த. சுரேஷ், நாகர்கோவில்

மேலும்....

தொழிலாளர் பிரச்சினை

 

நம் நாட்டில் தொழிலாளர் பிரச்சினையானது மற்ற மேல் நாட்டுத் தொழிலாளர் பிரச்சினைபோல் இல்லாமல் மிகச் சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது. இந்தியா பூராவிலுமே தொழிலாளர் பிரச்சினை என்றால் யந்திரஸ்தாபனங்களில் வேலை செய்பவர்களுக்கும் ஒரு முதலாளியின் கீழ் கும்பலாக கூலிக்கு வேலை செய்பவர்களுக்கும் சம்பந்தப்பட்டவைகளாக மாத்திரம் கருதப்படுகின்றனவே ஒழிய, கைத் தொழில் செய்யும் சுதந்திரத் தொழிலாளரையும் அவ்வப்போது செய்கூலி பேசிக் கொண்டு சாமான்கள் பணிகள் செய்யும் தொழிலாளிகளையும் அன்றன்றைய பணியாளாக இருந்து வேலை செய்யும் நித்திய கூலிகளையும் பற்றிய பிரச்சினைகளைக் கவனிக்க எவ்வித பொது ஸ்தாபனமும் இல்லை. இதனாலேயே நம் நாட்டு வேலைப்பாடான தொழில் திறங்களும் கைத்தொழிலாளிகள் நிலைமைகளும் மிக்க சீர்கேடான நிலைமைக்கு வந்துவிட்டன.

உதாரணமாக, நெசவு முதலான கைத்தொழிலாளிகளின் நிலைமை மிக மிக மோசமாகிக் கொண்டே வருகிறது. அது போலவே கொல்லு, தச்சு முதலிய உலோக மர முதலான தொழிலாளர்கள் நிலைமையும் சீர்கேடாகி வருகின்றன.

மேலும்....

குரல்

 

தற்போது மகாத்மா காந்தி இருந்தாலும்கூட அவரால் ஊழல் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது.  அப்படிச் செய்யாவிட்டால் அரசியலிலிருந்து அவர் விலக வேண்டியது இருக்கும். கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் பணிகளுக்கு ஊழல் இன்றி ஒன்றும் செய்ய முடியாது.

குமாரசாமி, மேனாள் முதல் அமைச்சர், கருநாடகா


நாட்டின் வளர்ச்சிக்கும் அறிவியல் துறைகளில் படிக்கும் மாணவர்களை ஆராய்ச்சிகளில் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்தியக் குடிமைப் பணிகளைப் போல இந்திய அறிவியல் பணிகள் என்ற தனி பணிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.  அடுத்த 10 ஆண்டுகளில் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளிலும் ஆண்களுக்குப் போட்டியாக பெண்களும் உருவெடுப்பார்கள்.
அப்துல்கலாம், மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர்

மேலும்....