புறநானூற்றைத் திருத்திய “தமிழ்த் தாத்தா” உ.வே.சாமிநாதய்யர்

(புறநானூறு, சீவகசிந்தாமணி போன்ற சங்க இலக்கியங்களையும், பழந்தமிழ் நூல்களையும் பதிப்பித்தவர் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர். இவ்வரிய பணியைச் செய்த அவர் ஆரிய இனத்திற்குச் சாதகமாக அவற்றில் சில திருத்தங்களையும் செய்தார் என்பது நம்தமிழர்கள் அறியார். எடுத்துக்காட்டாக, புறநானூற்றில் அவர் செய்த குறும்புத்தனத்தைக் கீழே காணும் பகுதி நமக்குத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழ்த் தாத்தாவை அவர்தம் பணிக்காகக் கொண்டாடும் நம் தமிழ்ச் சான்றோர்கள் கீழ்வரும் பகுதியைப் படித்து அவர்தம் பணியின் பெருமையை அறிந்துகொள்வார்களாக). ஆறுமுக நாவலரவர்கள் அச்சிட்டுள்ள திருக்குறட் […]

மேலும்....

மதங்கள் அன்பினால் பரப்பப்பட்டதா? – தந்தை பெரியார்

பகுத்தறிவாளர் கழகம் துவக்குவதற்கு முன் பகுத்தறிவாளர் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும். பகுத்தறிவாளர் என்றால் மனிதன். மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மனிதன் ஒருவன்தான் சிந்திப்பான். வாய்ப்பு வசதி, தேவை, வளர்ச்சி இவைகளைப் பற்றி மனிதன் ஒருவன்தான் சிந்திக்கின்றான், நிலைமைக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவன் மனிதன் ஒருவனேயாவான். மற்ற எந்த ஜீவனுக்கும் இந்த அறிவு கிடையாது. பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவினைப் பயன்படுத்திச் சிந்திக்காத காரணத்தால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொண்டு இராகுகாலம், குளிகை, எமகண்டம் என்றும், பூனை […]

மேலும்....

அம்பலமான இந்துத்துவத்தின் முகம்

இந்துத்துவாக்களின் வெற்றிநாயகனாக சில ஆண்டுகளுக்கு முன் கொண்டாடப்பட்டவர் குஜராத்தின் நரேந்திர மோடி. ஒரு கட்டத்தில் பிரதமர் பதவிக்கே பரிந்துரைக்கப்பட்டார். மீண்டும் குஜராத்தில் அவர் வெற்றிபெற்றபோது இந்துத்துவாவுக்குப் புதிய பார்முலாவைக் கொடுத்தவராகவும் பேசப்பட்டார்.இஸ்லாமியர்களே அவருக்கு வாக்களித்தனர் என்று கூறினார்கள். இப்படி அவர் புகழ்ந்துரைக்கப்பட்டது தீவிர இந்துத்துவாக் கொள்கையைக் கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு, குஜராத் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டியதால்தான். அது ஓரளவுக்கு குஜராத்தில் பா.ஜ.க.வைத் தக்கவைத்துக் கொள்ள உதவியது. ஆனால்,அவர்கள் இந்துத்துவாவை ஒத்திவைத்தார்களே தவிர விட்டுவிடவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் […]

மேலும்....

மணியம்மையாரின் 91-ஆம் ஆண்டு பிறந்தநாள்

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் 91-ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று (10.03.2011) அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கழகத்தினர் மலர் வளையம் வைத்து சூளுரை ஏற்றனர்.

மேலும்....

உண்மையான விடுதலை ஒப்பனைகளில் இல்லை!

மார்ச் 8- உலக மகளிர் நாள் – என்பது மகளிர் உரிமை பற்றி வெறும் பெண்களுக்கான புகழுரை, சம்பிரதாயமாக வாழ்த்துகளைக் கூறுதல் என்பதோடு, முடிந்துவிடக் கூடாது. உண்மையில் உலகின் சரி பகுதி மக்கள் தொகையான மகளிர் – மனிதத் தன்மையோடு, சம உரிமை சமவாய்ப்புடன் நடத்தப்படுகிறார்களா இந்த 21ஆம் நூற்றாண்டில்கூட என்ற சுயசிந்தனைப் பரிசோதனைக் கேள்விகளை எழுப்பி, அதற்குத் தக்க விடைகளை – விடியலைச் செயல் வடிவத்தில் காணுவதே சரியான பகுத்தறிவாளர் அணுகுமுறையாகும். நம் அறிவு ஆசான் […]

மேலும்....