ராமனுக்குச் சீதை சகோதரியே – ரொமிலாதாபர்

சமஸ்கிருதத்தில் உள்ள வால்மீகி இராமாயணம், பாலி மொழியில் ஜடாகா கதைகளில் உள்ள புத்தமதக் கதை, பாமாகாரியம் என்னும் பிராகிருத மொழியில் உள்ள ஜைனமதக் கதை – ஆகியவற்றை ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் வரலாற்றுப் பேராசிரியர் ரொமிலாதாபர். அவை : கி.மு. 400 முதல் கி.பி. 400 வரையிலான 800 ஆண்டு காலத்தில் வால்மீகியின் ராமாயணக் கதைக்கு பல இணைப்புகள், இடைச்செருகல்கள் செய்யப்பட்டன.  எடுத்துக்காட்டாக, ராமரின் கணையாழியை ஹனுமான் சீதையிடம் கொடுப்பதான கதை, பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் உறுதிப்படுத்தி […]

மேலும்....

செய்திக்கூடை

சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டு 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு கட்டாயமாவதால், இந்த ஆண்டே 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத் தேர்வு இருக்காது என்று சட்டசபையில் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதான அப்துல் நசீர் மதானியின் ஜாமீன் மனுவினை பெங்களூர் […]

மேலும்....

மத வழக்கங்களுக்கு எதிரான மகளிரின் போராட்டம்

இந்த உலக நாத்திக மாநாட்டுக்கு என்னையும், நார்வே நாட்டு பிரதிநிதிக் குழுவைச் சார்ந்த மற்றவர்களையும் அழைத்ததற்கு நன்றி. நார்வே நாட்டு மனிதநேய அமைப்பின் பொதுச் செயலாளராக நான் பணியாற்றுகிறேன். எங்களது முக்கிய நோக்கம் மனிதநேயத்தை வளர்ப்பது, மதம் மற்றும் கடவுள் நம்பிக்கையிலிருந்து மக்களை விடுதலை பெறச் செய்வது, பல்வேறுபட்ட மதங்களைச் சார்ந்த – எந்த மதத்தையும் சாராத சமூகத்தினரை சமத்துவ முறையில் நடத்துவது ஆகியவைதாம். பெண்கள் உரிமைகளுக்காகப் பணியாற்றிப் பழக்கப்பட்டவள் நான்.  இதுதான் பத்தாண்டு காலத்துக்கும் மேலாக […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….

புரட்சி வெளியிட்ட செய்தி பெரியார் எதற்காக இதழ் நடத்த விரும்பினார் என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறதன்றோ? மேலும், அக்காலத்திய பரோடா மன்னரின் தனியாட்சியில் மகளிர் முன்னேற்றம் கருதிச் செய்யப்பட்ட ஓர் அரிய சட்டம்பற்றிய செய்தியைப் புரட்சியின் 4.2.1934 ஆம் நாளிட்ட இதழ் நமக்குத் தருகிறது. பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, இந்துச் சமுதாயச் சட்டத்தைப் பின்வருமாறு திருத்திப் புதிய சட்டம் ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.  புதிய சட்டப்படி, ஓர் இந்துப் பொதுக் குடும்பத்தைச் சேர்ந்த […]

மேலும்....

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் – SELF-RESPECT MARRIAGE BUREAU

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை   தோழியர் தேவை வயது 27, B.Com படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ 15,000/_ பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 33, I.T.I, (MMV)  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 10,000/- பெறக் கூடிய தோழருக்கு, நல்ல […]

மேலும்....