மடலோசை

அய்யா, தமிழ்ப் புத்தாண்டும், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கும் இணைத்து சுறவத்திங்கள் முதல் நாள் வருவதை ஒட்டி, உண்மை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.  சில நாள்கள் முந்திதான் எனக்குப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  அதில் வெளிவந்த அத்தனை கட்டுரைகளும் ஒன்றை ஒன்று மிஞ்சக் கூடிய சொத்தை இல்லா முத்துக்கள்.  அறிவு ஆசான் அவர்கள் 15.1.1949 குடியரசு ஆசிரியர் உரையாக (தலையங்கம்) பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்? என்ற தலைப்பில் வந்த கட்டுரையை நான் பல தடவை படித்துப் படித்து […]

மேலும்....

ஆஸ்திரேலியாவில் வெள்ளமும் மக்களின் இன்னலும்

ஆஸ்திரேலிய நாட்டின், குயின்ஸ்லாந்து மாநிலத்தின், தலைநகர் பிரிஸ்பேன் நகர், டிசம்பர் மாதம் துவங்கி நான்கு, அய்ந்து மாதங்களுக்குரிய காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி பார்த்துச் செல்வதற்கு ஏற்ற ஒரு  நகரப்பகுதி. கோடைக்காலப் பருவ வெப்பம் 250C  முதல் 200C  இருக்கக்கூடிய காலம், நாங்கள் (இணையரும், நானும்) எங்கள் மகள் அல்லி (கல்வித்துறை அறிஞர் நெ.து. சுந்தரவடிவேல் தலைமையில், ஆசிரியர் வாழ்த்துகளுடன் திருமணம் செய்து கொண்டவர்) உள்ள பிரிஸ்பேன் நகருக்கு ஜனவரி முதல் நாள் சேரும்படி ஏற்பாடுகளைச் […]

மேலும்....

பதிவுகள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தொடங்கிய அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் பிப்ரவரி 6 இல் நடைபெற்ற கூட்டத்தில் முஷாரப்மீது ஷூ வீசப்பட்டது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி பிப்ரவரி 9 இல் தொடங்கியது. பாகிஸ்தானில் 52 பேர் கொண்ட மந்திரிசபை பிப்ரவரி 9 இல் கலைக்கப்பட்டது. எகிப்தில் அதிபர் முபாரக் பிப்ரவரி 11 இல் பதவி விலகியதாக துணை அதிபர் உமர் சுலைமான் அறிவித்ததையடுத்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.  செப்டம்பரில் ஜனநாயக ரீதியில் […]

மேலும்....

சிறைக்கு நான் பயப்படவில்லை

ஆச்சாரியார் – சாஸ்திரி வாக்குவாதம் இன்று காலை 6..15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்த பெங்களூர் மெயிலில் முதல் மந்திரி இராஜகோபாலாச்சாரியார் வந்திறங்கினார். அதே வண்டியில் நேற்று வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த இந்தி எதிர்ப்புத் தொண்டர்களான தோழர் என்.என். சாஸ்திரி உள்ளிட்ட சுமார் 10 தொண்டர்களும் வந்திறங்கினர். இத்தொண்டர்கள் மந்திரி ஆச்சாரியாரைக் கண்டதும், இந்தி ஒழிக, தமிழ் வாழ்க எனக் கோஷம் செய்தனர். தொண்டர்களை வரவேற்க வந்திருந்து வெளியில் நின்றிருந்த தோழர்களும் பேரொலி செய்தனர். […]

மேலும்....

இவர்கள் பகுத்தறிவாளர்கள்

பென் & டெல்லர் பெயர் : பென் & டெல்லர் (Penn Jillette & Raymond Joseph Teller). பிறப்பு : பென் (05.03.1955), டெல்லர் (14.02.1948). நாடு : சான் பிரான்சிஸ்கோ (San Fransisco), அமெரிக்கா. துறை : மாய வித்தை, திரைத்துறை, இசைத் துறை, எழுத்து, மேடை நகைச்சுவை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அடங்கிய பொழுதுபோக்குத் துறை. சிறப்பு : பென் அண்டு டெல்லர் என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ் பெற்றார்கள். […]

மேலும்....