ஆசிரியர் பதில்கள்

கேள்வி : கடவுள் உண்டா இல்லையா என்பது இருக்கட்டும்.  கடவுள் நம்பிக்கை இருப்பது நல்லதுதானே  என்று கேட்கும் நண்பருக்கு என்ன பதில் சொல்லுவது? – இ. கிருபாகரன் , சோளிங்கர் பதில் : உங்கள் நண்பரைக் கேளுங்கள்; கடவுள் நம்பிக்கை இருப்பது எவ்வகையில் நல்லது என்று. 1. கடவுள் நம்பிக்கையினால் ஒழுக்கம், நன்னடத்தை கூடுமென்றால், இத்தனை சிறைச்சாலைகள், குற்றங்கள், கோயில்கொள்ளைகள், அர்ச்சகர்களே பெண்களிடம் ஒழுக்கயீனமாக நடத்தல் நாளும் பெருகுமா?  சங்கரமடம் கொலைக்குற்றத்திற்கு ஆளாகுமா?  போப்பாண்டவர்களே ஒழுக்கக்கேட்டினை ஒப்புக் […]

மேலும்....

பேராசையும் சோம்பேரித்தனமுமே பிரார்த்தனையின் அடிப்படை

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று இருந்தும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும், எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.

பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லுவதுண்டு.

மேலும்....

குரல்

  • ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் மீது நேட்டோ விமானங்கள் குண்டுவீச இனி அனுமதிக்கப்படமாட்டாது.  குண்டு வீச்சு தொடர்ந்தால், அவர்கள் ஆப்கன் மக்களுக்கு எதிராக, ஆப்கனை ஆக்கிரமித்துள்ள அந்நியப் படைகளாகக் கருதப்படுவர். – ஹமீத் கர்சாய், அதிபர், ஆப்கானிஸ்தான்
  • தமிழ் மக்களின் விடயம் அனைத்துலகின் பார்வைக்கு வர நீண்டகாலம் ஆகியிருக்கிறது.  தற்போது முன்னிலைக்கு வந்துள்ள தமிழ் மக்களின் விடயத்தை வைத்து அவர்களுக்கு நீதி கிடைக்க அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும். – போல் மேர்பி, நாடாளுமன்ற உறுப்பினர், அய்ரோப்பா
    மேலும்....

பதிவுகள்

  • மே 28 அன்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில், 496 மதிப்பெண்கள் பெற்று 5 மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.  தேர்ச்சி சதவிகிதம் 85.3. 495 மதிப்பெண்களை 11 மாணவ மாணவிகளும் 494 மதிப்பெண்களை 24 பேரும் பெற்றுள்ளனர்.
  • சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சபாநாயகர் அறையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மே 30 அன்று 12 ஆவது முறையாக எம்.எல்.ஏ. பொறுப்பேற்றார்.
  • அரசு சுகாதார மய்யங்களில் பெண்களுக்கான இலவச பிரசவத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூன் 1 அன்று தொடங்கி வைத்தார்.
    மேலும்....

ராம்தேவ் ரகசியங்கள்

ன்றைய இந்தியாவின் பெரும் மக்கள் திரளான மத்திய தரவர்க்கத்திடம் எப்படிப் புகழ் பெறலாம்-?, அவர்களது குற்ற உணர்வைத் தூண்டுவதன் மூலம் பழியைப் பிறர் மீது போட்டுத் தப்பித்துக் கொண்டு, தம் மீது தூய பிம்பத்தை வார்த்துக் கொள்ளும் தந்திரத்தை அவர்களுக்குக் கற்றுத் தந்து எவ்வாறு தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற வித்தையை அரசியல்வாதி களைக் காட்டிலும் அண்மைக் காலங்களில் சிலர் கற்று வைத்திருக்கிறார்கள்.

மேலும்....