பழிவாங்கும் நடவடிக்கையை விட்டு ஆக்கரீதியாகச் செயல்படட்டும்!
16.05.2011 அன்று அ.தி.மு.க. அரசு, -செல்வி ஜெயலலிதா அவர்களை முதல் அமைச்சராகக் கொண்ட அரசு – தனது 33 அமைச்சர்களுடன் பதவி ஏற்றுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைச்சரவைக்கு நமது வாழ்த்துகள்.
பதவி ஏற்ற நிலையில், முதல் ஏழு கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டு துவக்கியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்துபவைகளாக அவை இருப்பது வரவேற்கத்தக்கது.
முந்தைய தி.மு.க. அரசின் இலவசத் திட்டங்களின் விரிவாக்கங்களாகவே அவை அமைந்துள்ளன. காரணம், அரசுகள் என்பவை மாறி மாறி வந்தாலும் – மக்களாட்சியின் மாண்பே அரசுகள் என்பவை ஒரு தொடர்ச்சி என்பதேயாகும்.
மேலும்....