சிறுகதை

கும்பிடுறேன் சாமி ஏய்.. புள்ளைய சீக்கிரம் கிளப்பி விடடி.. நேரம் ஆயிட்டு.. ராவுத்தர் கடையில முட்டாயி, சீனி சர்க்கரை எல்லாம் வாங்கிட்டுப் போகனும்.. என்று அவசரப்படுத்தினான் ஓடையன். இந்தாளு ஒரு கூறுகெட்டது.. கடைசி நேரத்துலதான் கெடந்து பறக்கும், புள்ள மொத மொதலா பள்ளிக்கொடம் போவப்போவுது.. கொஞ்சம் நல்லபடியா அனுப்ப வேணாம்.. நம்ம பொளப்புதான் நாயிப் பொளப்பவிட கேவலமாப் போச்சு. கண்ணு, நீனாலும் படிச்சு பெரிய ஆளா வரணும்.. முழுக்கால் ட்ரவுசர் போட்டுக்கிட்டு பெரிய பெரிய பொஸ்தக மெல்லாம் […]

மேலும்....

குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

தென்மாபட்டில் சுயமரியாதை இயக்கமும், வைதீகர்களின் நடுக்கமும்:- (1925-இல் வைக்கம் வீரர் தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு அதன் தாக்கம் நாடு பூராவிலும் பரவியது.  ஆங்காங்கு வாசக சாலை தோன்றி சுயமரியாதைப் பிரசாரங்களும், புரோகித மறுப்புத் திருமணங்களும் பெருமளவில் நடந்து வந்தன.  பல இடங்களில் பார்ப்பன தாசர்களாகிய சில வைதீகப் பிடுங்கல்கள் சுயமரியாதைப் பிரசாரத்தை எதிர்த்தன.  அப்படிப்பட்ட ஒரு எதிர்ப்பு, தென்மாபட்டு என்ற ஊரில் வைதீகர்கள் சேர்ந்து கூட்டம் கூட்டி செய்த தீர்மானங்களைப் படித்தால் தற்போது நமக்கு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : சமீபத்தில் இறந்துபோன ஒசாமா பின்லேடன், புட்டபர்த்தி சாய்பாபா இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? வித்தியாசம் என்ன? – ஆ.சுஜாதன், முசிறி பதில் : இரண்டு பேரும் மதத்தை மூலதனமாக்கியவர்கள் என்பது ஒற்றுமை; ஒருவர் தீவிரவாதி என்ற முத்திரையுடன் செயல்பட்டவர்.  மற்றவர் (பாபா) அப்படி ஏதும் இல்லாத பகவான் முத்திரையுடன் உலவியவர் என்பது வேற்றுமை! கேள்வி : நாய்களுக்கு இருக்கும் நன்றியுணர்ச்சி கூடவா நம் தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டது?  யானை தன் தலையில் தானே மண்ணை […]

மேலும்....

உலகப் பகுத்தறிவாளர் : தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி

சாத்தானா? கர்த்தரா? ஓர் அறிவியல் அமைப்பில் அவரும் அங்கம் வகித்தபோது, ஏனைய உறுப்பினர்கள் தங்களை தாங்கள் சார்ந்த மதம், அரசியல் கொள்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர். புரோடஸ்டன்ட், ரோமன் கத்தோலிக்க, பாசிடிவிஸ்ட் என்று அவரவரும் கூறிக் கொண்டனர். இவரது முறை வந்தபோது, மேற்கண்ட அடையாளங்கள் ஏதும் அற்றவரான ஹக்ஸ்லி தம்மை அக்னாஸ்டிக் என்று கூறிக்கொண்டார். ஆக்ஸ்போர்டு அகராதி அளிக்கும் அர்த்தத்தில் இச்சொல்லை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்த அகராதி இச்சொல்லுக்கு, கடவுள் என்பது புரியாத […]

மேலும்....

ஜாதியொழிந்த சமுதாயமும், தனிச் சுதந்திர ஆட்சியுமே நமக்குத் தேவை

வைதீகத் திருமணங்கள் மூலம் பார்ப்பனர்கள் ஜாதி வேறுபாடுகளை நிலை நாட்ட ஒரு பிரசார முறையாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சடங்கு முறைகள் என்பவை ஜாதிகளை நிலை நாட்டவே ஏற்பட்டனவாகும். அவரவர்கள் நான் இன்ன ஜாதி, என்னுடைய குல ஆசாரம் இப்படித்தான் என்று ஒரு பெருமையாகக்கூடப் பேசிக் கொண்டு ஒவ்வொரு முறையைக் கையாளுகின்றனர். இதன் மூலம் அவரவர்கள் அடிக்கடி தன் ஜாதியை நினைவூட்டி அதை மறந்துவிடாமல் உரிமை கொண்டாடி நிலைத்திருக்கச் செய்யும் வழியேயாகும். மேலும், இன்றைக்கு நடைபெறும் திருமணம் கலப்புத் […]

மேலும்....