துளிக்கதை

பக்தன் – அணு கலைமகள் மாலை நேரம் இரண்டு வாழைப்பழங்கள் வாங்குவதற்காக அந்தச் சிறிய பெட்டிக்கடைக்குச் சென்றேன். பெட்டிக் கடையின் முன்பகுதியை முழுவதும் மறைத்தபடி காவி வேட்டியுடன் கையில் சிகரெட் புகை, வாயில் பான்பராக்கைக் குதப்பியபடி கழுத்தில் ருத்ராட்ச மாலை, சாம்பல் பூசிய நெற்றியோடு பக்திமான் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர், பக்தி எப்படி இருக்க வேண்டும், எப்படி கடவுளைத் தொழுவது, மூலக்கடவுள் விநாயகர் துதி எப்படி உச்சரிக்க வேண்டும் என அந்தப் பெட்டிக்கடைக்காரருக்கு விளக்கிக் கொண்டிருந்தார். […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1. பெரியார் அவர்கள் 10 வயதுச் சிறுவனாக இருந்தபோது இரண்டு கால்களிலும் விலங்குக் கட்டைகள் பூட்டப்பட்டதற்கான காரணம் அ) மரங்களின் உச்சியிலும் வீட்டின் மாடியிலும் ஏறி விளையாடியமையால் ஆ) புழங்கக்கூடாத ஜாதியினருடன் புழங்கி, அவர்களின் வீட்டுத் தின்பண்டங்களைத் தின்று அவர்களோடு விளையாடியமையால் இ) ஊரைவிட்டு அடிக்கடி ஓடிப்போன மையால் ஈ) பெற்றோரையும் ஆசிரியர்களையும் மதிக்காமையால் 2. சிக்கனத்தின் சின்னம் பெரியார் அவர்கள் புகைவண்டியில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வது குறித்து அன்பர் ஒருவர் கேட்டதற்கு அய்யாவின் பதில் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….

மனதில் பட்டதைத் தைரியமாகச் சொல்லும் தலைவர் தமிழினப் பாதுகாவலராம் அய்யா அவர்களுக்குப் புதிய கார் பரிசளிப்பு விழா 19.8.1973 அன்று தஞ்சைப் பெருநகரில் தமிழினத்தின் வீரவரலாற்றுக் காவிய விழாவாக நடைபெற்றது.  நேற்று நடைபெற்ற இவ்விழாவுக்கு நிகர் இவ்விழாதான் என்று வியக்கும் வகையில் நடைபெற்ற அவ்விழாவின் மாட்சியை வருணிக்க வார்த்தையே இல்லை எனக் கூறலாம்.  தன்மான இயக்க வீரர்களின் போர்ப்பரணி பாடும் பாசறை விழாவாகத் திகழ்ந்த இவ்விழாவில், தந்தைக்குப் புதிய காரினைப் பரிசளித்துப் பேசிய தமிழக முதல்வர் கலைஞர், […]

மேலும்....

புதுப்பாக்கள்

நாதியில்லாத சாமி இயற்கைப் பேரழிவினைஆழிப் பேரலை ஊரைகபளீகரம் செய்யும் வேளையில்கண்களில் அகப்பட்டதைஅள்ளிக்கொண்டு ஓடுகையில்அபயக்குரல் ஒன்றுகாப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்                 –       என்றுகரை சேர்ந்துவிட்டுதிரும்பிப் பார்க்கிறேன், காப்பாற்ற நாதியில்லாததால்சலனமின்றி அடித்துச் செல்லப்படுகிறதுசர்வசக்தி வாய்ந்த அந்தசாமி சிலை….!! தண்டனைக்குரியவர்கள் உலகை இயக்குபவன் நானேஎன்று சொன்ன கண்ணனையும்எல்லாப் புகழும் இறைவனுக்கேஎன்றுரைத்த நபிகளையும்கடவுளை நம்பினோர்கைவிடப்படார் என்றுசொன்ன ஏசுபிரானையும்சர்வதேச நீதிமன்றத்தில்நிறுத்தி தண்டிக்க வேண்டும்ஈழப் படுகொலைக்காக   குருட்டு நம்பிக்கை மகப்பேறு காலத்தின்போதுசுவாசிக்க மறந்துஉலகைப் பிரிந்தஎன் சகோதரிக்குத் தெரியவில்லைஒளியின் மூலம் பிள்ளை […]

மேலும்....

எச்சரிக்கை

தொ(ல்)லைக்காட்சி… குழந்தைகள் படிக்காமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால், படிப்பு கெட்டுவிடும், அருகிலிருந்து பார்த்தால் கண்களுக்கு நல்லதல்ல என்று சொல்வோம். அதே தொலைக்காட்சியை, பெரியவர்கள் அதிக நேரம் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளை அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுவர். 3 மணி நேரத்திற்கு மேல் பார்த்தால் இதய அடைப்பும், அதிக நேரம் பார்த்தால் இளம் வயதிலேயே […]

மேலும்....