தமிழர்க் கொரு திருநாள்

தமிழர்க் கொரு திருநாள் – அது தைத்திங்கள் முதல் நாள்சமயத்துறை அறவே – உயர்தமிழ் வாழ்த்தும் பெருநாள். நமை ஒப்பார் யாவர்? – நம்தமிழ் ஒப்பது யாது?கமழ் பொங்கல் நன்னாள் – புதுக்கதிர் கண்ட பொன்னாள்! ஏரோட்டும் இரு தோள் – ஒருசீர் போற்றும் திருநாள்!ஆரோடும் உண்ணும் – நெல்அறுவடை செய் பெருநாள்! போராடும் கூர் வாள் – பகைபோக்குவ தோர் பெருநாள்!ஊரோடும் உறவோ – டும்உள மகிழும் திருநாள். மாடுகளும் கன்று – களும்வாழியவே என்றுபாடுகின்ற […]

மேலும்....

குரல்

தெலுங்கானா பிரச்சினையில், தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதைத் தவிர வேறு எந்த மாதிரியான தீர்வையும் ஏற்க மாட்டோம்.  இதை நாங்கள் ஏற்கெனவே பிரதமரைச் சந்தித்த போது தெளிவுபடுத்தி இருக்கிறோம்.– சந்திரசேகர ராவ் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் அசாமில் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நாங்கள் உறுதியாய் உள்ளோம்.  எந்த நிபந்தனையும் இன்றி அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். – அரபிந்தா ராஜ்கோவா உல்பா அமைப்பின் தலைவர் பேச்சுவார்த்தைக்கு முன்பாக எங்கள் இனத்தைக் சேர்ந்த […]

மேலும்....

பொங்கள் புதுநாள் தோன்றியது ஏன்?

உழுது பாடுபட்ட பாட்டாளி உழு பயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்! மழையென்றும் வெய்யில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும் பாம்பு-களுக்கும் பச்சை ரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற்குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்-போடு, ஆனந்தப் பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்? இரட்டைப் பிள்ளைகளைச் சுமந்து வருந்திய தாய், […]

மேலும்....

திருச்சியில் நாத்திகர்களின் சங்கமம்

அனைவரும் சமமானவர்களாகப் பிறந்து இருப்பதால் அவர்கள் சமமாகவே வாழ வேண்டும் என்ற தீர்மானத்தை, திருச்சியில் ஜனவரி 7,8,9 தேதிகளில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு நிறைவேற்றியிருக்கிறது. உலகப் பகுத்தறிவாளர்களின் தலைநகரமான தமிழ்நாட்டின் திருச்சியில் பகுத்தறிவாளர் கழகம், விஜயாவாடா நாத்திகர் மய்யம், திராவிடர் கழகம் இணைந்து மாநாட்டினை நடத்தினர். மாநாட்டின் மய்ய ஊக்க சக்தியான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியாரை உலகமயமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றதை இம்மாநாடு அறிவுறுத்தியது. இந்தியாவில் பிற மாநிலங்களிலிருந்தும், உலகின் […]

மேலும்....

2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை:

2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை: நாம் சுவாசிக்கும் காற்றுக்குக் கூட விலை வைத்து பெரும் நட்டம் என்று சொல்லுவார்களோ! தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தமாக, தி.மு.க.வைச் சேர்ந்த (முன்னாள்) அமைச்சர் ஆ.இராசா அவர்கள்மீது எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாற்றுகள் ஒவ்வொன்றும் ஆதாரமற்றவை; அரசியல் நோக்கம் கொண்டவை என்பது ஒவ்வொரு நாளும் வெளியாகும் பல உண்மைகள்மூலம் அம்பலமாகி வருகின்றன. 1971 இல் நடந்த தேர்தலின்போது இப்படி ஊழல், ஊழல் என்றே தி.மு.க. மீது பழி சுமத்தி அது வெற்றி […]

மேலும்....