தமிழர் செய்ய வேண்டியது எது?
மொழிகள் வழங்குவது வாயினால். பல சொற்கள் சேர்ந்தே மொழி. சொற்களை ஒவ்வொன்றாய் வழங்காதுவிட்டால் பின்பு மொழியும் வழக்கற்றொழியும். எழுத்து வடிவிலிருப்பது மட்டும் மொழிவழக்கன்று. கோதியம் (Gothic), இலத்தீன், சமற்கிருதம், முதலிய வழக்கற்ற மொழிகளெல்லாம் எழுத்து வடிவில் இன்னுமுள. ஆரியச் சொற்களைத் தேவையின்றிக் கலந்ததினால் அவற்றின் நிலையிலிருந்த திரவிடச் சொற்களெல்லாம் வழக்கிறந்தும் மறைந்தும் போய்விட்டன. இலக்கியமுள்ள மொழியானால் வழக்கற்ற சொற்கள் இலக்கியத்திற் போற்றப்பட்டிருக்கும். அஃதில்லாததாயின் மீட்பற இறந்தொழியும். வருஷம், வார்த்தை, வியாதி, வீரன், வேதம் வைத்தியம் முதலிய வடசொற்கள் […]
மேலும்....