செய்தொழில் வேற்றுமையான் – புதியபார்வை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -972. இக்குறட்பா, பொருட்பாலில் பெருமை என்ற அதிகாரத்தில் உள்ளது.  இக் குறட்பாவுக்கு மணக்குடவர் மற்றும் பரிமேலழகர் முதல், நம் காலத்திய உரையாசிரியர்கள்வரை எண்ணற்றோர் உரை கண்டுள்ளனர். இப்போதும் பற்பலர் உரையெழுதி வருகின்றனர்.  இக்குறட்பாவுக்கு இதுகாறும் கண்ட உரைகள் இயல்பானவை-யாகவோ பொருத்தமுடையனவாகவோ இல்லை. அவ்வுரைகள் இக்குறட்பாவுக்கு ஓரளவே ஒத்துள்ளனவேயன்றி முழுமையாகப் பொருந்த-வில்லை. இக்குறட்பாவுக்கு இயல்பான, உண்மையான உரையைக் காண வேண்டுமாயின், திருக்குறள் முழுவதையும் ஒப்பு நோக்கி அவருடைய காலச் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : கோவை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அங்குள்ள கைதியிடம் தன் வீட்டில் பூஜை, பரிகாரம் செய்யக் கேட்டிருக்கிறாரே! குற்றவாளிகளைத் திருத்த வேண்டியவர்களே இப்படி இருக்கிறார்களே?-இயற்கை தாசன், கொட்டாகுளம் பதில் : இதுபற்றி சிறைத் துறை டி.ஜி.பி. அய்.ஜி, அமைச்சர் ஆகியவர்களுக்கு அவசியம் எழுதுங்கள்; என்ன நடவடிக்கை தொடருகிறது என்று பார்க்கலாம்!  மகா வெட்கக்கேடு! கேள்வி : புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை, தமிழகத்துக்கு அடையாளம் காட்டிய அய்யா பெரியார் அவர்களை அம்பேத்கர் திரைக் காவியத்தில் காண […]

மேலும்....

தமிழின் சிறப்பு – ராபர்ட் கால்டுவெல்

திராவிட மொழியும் கிளைமொழியுமான ஒவ்வொன்றின் இலக்கண அமைப்பையும் அதன்தன் தகுதிக்கும் ஆசிரியர்க்கு அதிலுள்ள பயிற்சிக்கும் தக்கவாறு மிகவோ குறையவோ ஆராய்ந்து விளக்கும்போதே, தாம் முப்பத்-தேழாண்டுகட்கு மேலாகப் பயின்று வந்ததும் தம் மதத் தொண்டிற்குப் பயன்படுத்தியதும் திரவிட மொழிகளுட் பெரும்பாலும் முதன்முதற் பண்படுத்தப் பெற்றதும் தலைசிறந்த முறையில் வளர்க்கப் பெற்றதும் பலவகையிலும் திரவிடக் குடும்பத்திற்குப் பதின்மை தாங்கு-வதுமான, தமிழமைப்பை அடிக்கடி எடுத்துக்காட்டுவது ஆசிரியரின் சிறப்பு நோக்கமாகும். இக்குடும்பம் (திரவிடம்) ஒரு காலத்தில் அய்ரோப்பிய ஆசிரியரால் தமிழியம் (Tamulian or […]

மேலும்....

தமிழிசைக் களஞ்சியமாய் ஓர் அகராதி

தமிழர் வரலாறும்,தமிழின வரலாறும் பெரும்பகுதி மறைக்கப்பட்டது அல்லது கவனம் பெறாமல் போனதாகத்தான் இருக்கும். இலக்கியம், கலை, பண்பாடு தொடர்பான பல நூல்கள் இன்னும் நமக்குக் கிடைக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. கிடைத்தவற்றில் ஆய்வு செய்யப்பட வேண்டியவையும் உண்டு.இந்த வரிசையில் தமிழிசை குறித்த ஆய்வு நூல்கள் போதுமான அளவுக்குத் தேவைப்படும் சூழலில் ஓர் அரிய அகராதியைக் கொண்டுவந்துள்ளார் தமிழிசை ஆய்வாளர் மதுரை நா.மம்மது. தமிழிசை மறைக்கப்பட்டு அதையே உள்வாங்கி கர்நாடக இசை என்று சொல்லி தெலுகு பாடல்களைப் பாடும் […]

மேலும்....

மீண்டும் ஒரு கவிதை

  கடவுள்களின் வயிற்றைக் கிழித்துப் பிறக்காமல்வியர்வையும் புன்னகையும் கலந்தமனித வயல்களிலிருந்து பிறந்த மொழி எனது தாய்மொழி. என் மொழி எந்தக் கடவுளுக்கும்குடியுரிமை  கொடுத்ததில்லை மதங்களின் நகல்விழாக்களில்எனது மொழியின் பவளச்சுவடுகள் பதிவதில்லை எனது மொழி இனத்தின் தோலாக இருக்கிறதுயுகங்களை ஜீரணிக்கும் திராணியோடு இருக்கிறது. மொழியின் கண்கள் வழியாகத்தான் காலமும் பார்க்கிறது. மொழியின் நிழலுக்குள்நுழையும் போதுஜாதிச் செருப்புகளைக் கழற்றிவிடுகிறோம். மதங்களின் மயிர்க்கற்றைகளைபடியவாரிக் கொள்கிறோம்.மொழியின் வனங்களைஅசுத்தப்படுத்த அனுமதிப்பதில்லை யாரையும். இப்போதும் உணர்கிறேன்ஒரு தாயின் அரவணைப்பைதமிழ்ப் புத்தாண்டில்****அசரீரிகளாலும்அவதாரங்களாலும்தூர்ந்து போகாத ஆழங்களைக் கொண்டதுஎனது மொழி. […]

மேலும்....