இதுதான் பார்ப்பனீயம்!

மத்தியப் பிரதேச குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையரான ஒரு பார்ப்பன நீதிபதி உயர்ஜாதித் திமிருடன் மிகவும் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார். இந்த அமைப்பின் ஆணையராக உள்ள நீதிபதி ஷீலா கன்னா என்ற அந்தப் பெண், உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை மய்யத்துக்குக் கொண்டு வரும் குழந்தைகளின் ஜாதகத்தைப் பார்த்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிகிச்சை மய்யத்தில் ஒரு பார்ப்பனப் பூசாரியை நியமியுங்கள். இந்த மய்யத்திற்குக் கொண்டு வரப்படும் ஒவ்வொரு குழந்தையின் ஜாதகத்தையும் இந்தப் பூசாரி சரி […]

மேலும்....

சபரிமலையில் அய்யனாரா? அய்யப்பனா?

இந்தியாவைப் பொறுத்தவரை பன்னாட்டு வியாபாரத்தைவிட படுஜோராக நடப்பது பக்தி வியாபாரம்தான். சுற்றுலா செல்வதுபோல அடிக்கடி கோயில்களுக்குக் கிளம்பிவிடுவது இந்துப் பக்தப் பெருமக்களின் பொழுது போக்காகவே மாறிவிட்டது.இந்த மன நிலையைப் புரிந்து கொண்டுதான் இங்கே புதுப்புது சாமிகளும், கோயில்களும் தோன்றிவருகின்றன. சாமியார்கள் ஒரு பக்கம் கல்லாக்கட்டுகின்றனர்.ஒரு காலகட்டத்தில் இப்படித் தோன்றிய ஒரு கோயில்தான் சபரிமலை அய்யப்பன்(?)கோயில்.கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள இந்தக் கோயிலுக்கு அந்த மாநில பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.(அவர்களுக்குக் கோயிலின் ரகசியம் தெரியும் என்பதாலோ?) பெரும்பாலும் தமிழ்நாடு, […]

மேலும்....

சமதர்ம ஆட்சி என்பதற்கு அடையாளமான பட்ஜெட்

வருகின்ற 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு – இடைக்கால அறிக்கை – கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசின் நிதி அறிக்கை  பேராசிரியர் அவர்களால் பிப்ரவரி 5இல் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடைக் கால வரவு – செலவுத் திட்டம், ஓர் மக்கள் நல அரசு எப்படி அனைவருக்கும் அனைத்தும்  அளிக்கும் அரசு என்ற முறையில் அமைந்துள்ளது என்பதற்கான  ஓர் அற்புதமான அறிக்கையாகும். அதுவும் வரிகள் […]

மேலும்....

செய்யாத குற்றத்திற்குப் பழி சுமத்தப்பட்டுள்ளார் ஆ.ராசா

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க.வின் சார்பில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா அவர்கள், தனது ஆட்சிக்காலத்தில் செய்த மிகப்பெரிய சாதனை, ஏழை- எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் (20, 30 காசு) தொலைப்பேசியில் பேசிடும் வாய்ப்பை ஏற்படுத்தி வரலாறு படைத்ததாகும். 60 விழுக்காடு அலைக்கற்றைகள் இராணுவத்தால் பயன்படுத்தப்படாமல் இருந்தது அறிந்து, அவைகளைப் பெற்று வெகுஜனப் பயன்பாட்டிற்குப் பயன்படும்படிச் செய்தார். ஏலத்தின்மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு கஜானாவுக்கு வருவாய் தேடிக் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

கேரள மாநிலம் கொச்சியில் மன்னர் ஆட்சி நடந்தபோது- நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்,நீதிபதி இருக்கையில் இருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டே விசாரிக்கப்பட்டனர் என்பதும்,1814 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்யவேண்டும் என்று அந்த அரசாங்கம் ஆணையிட்டது என்ற வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....