பதிவுகள்

இந்தியக் கடற்படைக்காக இத்தாலியிலிருந்து புதிதாக வாங்கப்பட்ட அய்.என்.எஸ். தீபக் டேங்கர் கப்பல் ஜனவரி 21 இல் முறைப்படி கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஆஸ்திரேலியப் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ், அவரது இரு மகன்களை ஜீப்புடன் தீவைத்துக் கொலை செய்த குற்றவாளி தாராசிங்குக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஜனவரி 21 இல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி ஜனவரி 24 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். வெளிநாட்டு வங்கிகளில் […]

மேலும்....

உலப்பகுத்தறிவாளர்

சல்மான் ருஸ்டி சாத்தானின் கவிதைகள் படிக்கும்போது முதலில் விளங்காததுபோல் தெரியும்; குழப்பமாகத் தோன்றும்.  மறுமுறை படிக்கும்போது தெளிவாகப் புரியும்.  என்ன கருத்தைச் சொல்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.  கதை ஒன்பது பாகங்களைக் கொண்டது.  கதைப்போக்கு ஒற்றைப்படை எண்களைக் கொண்ட அய்ந்து பாகங்களில் சொல்லப்படுகிறது.  இரட்டைப்படை எண்களைக் கொண்ட 2,6 பாகங்கள் முகமது நபியின் செயல்பாடுகளை விவரிக்கிறது.  தொடக்க நிலையில், மெக்கா என்றழைக்கப்படும் ஜாகிலியா எனும் பாலைவன நகரில் அவரது செய்கைகளையும், 4,8 பாகங்கள் ஆயிஷா எனும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி: சோ ஆதரிக்கச் சொல்லும் ஜெயலலிதாவின் கூட்டணி, மதவெறி கொண்டோர் கூட்டணி என்று தெரிந்தபிறகும் பொதுவுடைமைக் கட்சியினர் அதில் இணைந்திருப்பது எதனைக் காட்டுகிறது?  – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர் பதில்: அதைவிடக் கொடுமை பா.ஜ.கவுடன் நிரந்தரத் தொடர்புடன் உள்ளவர்களோடு கூட்டணி என்பதும் இவர்களைக் கேட்காமலேயே காங்கிரஸ் பக்கம் செல்ல எல்லா முயற்சிகளையும் செய்த அம்மையார் பற்றி சிறிதுகூடக் கவலைப்படாமல் சில சீட்டுகளுக்காக, இப்படி நடந்து கொள்ளலாமா முற்போக்கு பேசும் நம் நண்பர்கள்? கேள்வி: தமிழ்நாட்டில் […]

மேலும்....

ஜோதிடம் – பெரியார்

ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா?  அப்படி ஒன்று இருக்க முடியுமா?  என்பன முதலாகிய விஷயங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம். ஜோசியம் என்பது உலக வழக்கில், அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை, அதன் சம்பவம், பலன் முதலாகியவைகளை மொத்தமாய் வருஷ பலனாயும், மாத பலனாயும், தின பலனாயும், நிமிஷப் பலனாயும் சொல்லுவதும், அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோதம் […]

மேலும்....

குரல்

அமைதி, வளர்ச்சி என்ற பாதையில் செல்வதையே சீனா விரும்புகிறது.  ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதையோ, எந்த ஒரு நாட்டுக்கும் ராணுவ அச்சுறுத்தலாக இருப்பதையோ விரும்பவில்லை.  செல்வாக்கு செலுத்துவதையோ அல்லது விரிவாக்கத்தைப் பின்பற்றுவதையோ சீனா விரும்பாது. ஹூ ஜிண்டாவோ, அதிபர், சீனா நாம் நம் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உள்ளத்தைத் தாளில் பார்க்கிறோம்.  எழுத்து எங்கோ ஓர் இதயத்தில் தைக்கிறது.  மாற்றங்களை உருவாக்குகிறது.  எழுதுவது மக்களுக்காகத்தான்.  எழுத்து எழுதுவதற்காகவே என்பதில் நான் மாறுபடுகிறேன். மேத்தா, கவிஞர் தமிழர்களுக்குத் தமிழ் உணர்வு […]

மேலும்....