புதிய கண்டுபிடிப்புகள்

பயோநெக்டார் எரிபொருளைப் பயன்படுத்தி புகையை வெளியிடாமல் ஆக்சிஜனை வெளியிடும் மெர்சிடிஸ் பென்ஸ் பயோம் என்ற புதிய வாகனம் தாயரிக்கப்பட உள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தி எரிபொருளைச் சேமிக்க ஹெர்பாலயாஸ் பியூல்கேர் சொல்யூசன் நிறுவனம் பியூல் பிளஸ், கியாஸ் பிளஸ் என்ற கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எய்ட்ஸ் நோயினைத் தடுக்கும் துருவதா என்ற மாத்திரையை கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கால்களால் பெடல் செய்து சார்ஜ் செய்யும் மின்சாரக் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….

பெண் போலீஸ் தந்தை பெரியார் அவர்கள் ஆண், பெண் சரிநிகர் சமம் என்ற கொள்கையுடையவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக,  1973 – கலைஞர் அரசு தமிழ்நாட்டில் முதன் முறையாக, பெண் போலீஸ் பிரிவு ஒன்றை நியமிப்பது என்று அறிவிப்பு வெளியிட்டது. அதனை அய்யா அவர்கள் மிகவும் பாராட்டி வரவேற்கத் தகுந்த ஒன்றாகும் என்று கூறினார்கள்.   பெண் போலீஸ் படையின் முதல் கட்டமாக, ஒரு சப் – இன்ஸ்பெக்டர், ஒரு ஹெட்கான்ஸ்டெபிள் அந்தப் பிரிவில் இருப்பார்கள்.  இதற்காக இந்த ஆண்டு […]

மேலும்....

நூல் அறிமுகம்

நூல்: இணையம் கற்போம்ஆசிரியர்: முனைவர்    மு.இளங்கோவன்வெளியீடு: வயல்வெளிப் பதிப்பகம்,இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்),கங்கை கொண்ட சோழபுரம் (வழி),அரியலூர் மாவட்டம்\612 901பக்கங்கள்:176 விலை:ரூ.100/-\ இளைய தலைமுறையினரிடம் இரண்டறக் கலந்துவிட்ட இணையத்தை மூத்த தலைமுறையினர் தெரிந்து கொள்வதன் அவசியம் பாங்குடன் விளக்கப்பட்டுள்ளது. வானொலி, தொலைக்காட்சி, செல்பேசி போன்றன எப்படி ஆதிக்கம் செலுத்தி, மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றானதோ அதுபோல வரும் காலத்தில் இணையமும் இருக்கும் என்கிறார் நூலாசிரியர். இணையம் என்பதன் விளக்கம், அனைத்துத் துறைகளிலும் அரசாட்சி செய்யும் விதம், இணையத்தைப் பயன்படுத்தும் […]

மேலும்....

புதுப்பாக்கள்

வெட்கம் கெட்டவன் புழுவாய்ப் பிறந்தாலும், புதிய சிறகில் அழகழகாய் அலைந்து திரிந்துபூத்த மலர்நாடி, புதிய தேனுறிஞ்சிபதமாய்ப் பத்திரப்படுத்தியதை….அலட்டிக் கொள்ளாமல், அமாவாசை இருட்டில் வந்து, ஆயிரமாயிரம்தேனீக்களைத் தீயிட்டுக் கொழுத்திதிருடிய தேனில் சாமியைக் குளிப்பாட்டிதீட்டைக் கழிக்கிறான்  வெட்கம்           கெட்டவன்பசுவுடன், தேனியும் திட்டுகிறது…. – நா. சுப்புலட்சுமிதிருப்பத்தூர் யாருக்கு வடை? வடைமாலை படைத்தார்கள்வாய்திறவா அனுமாருக்கே _ பின்வடையைத் தின்றதோ _ வாய்படைத்த மனிதர்களே! – ரா. தேன்மொழிசென்னை   உழைப்பு சொந்த வீடு….கட்டுகிறது, குருவி!நான்,குடியிருக்கும்வாடகை வீட்டில்!!ஆனால்….குருவி வீட்டில்…பூஜை அறை இல்லை! – […]

மேலும்....

சிறுகதை

டெல்லிக்குப் போன பழனிச்சாமி இவன் எப்படிச் சமாளித்தான்?  டெல்லிக்குப் போய்த் திரும்பிய பழனிச்சாமியைச் சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.  மார்கழிக் குளிரில் தமிழ்நாட்டிலேயே உடம்பெல்லாம் தந்தி அடிக்கும்போது, டெல்லி குளிரை வேட்டி, சட்டையில் பழனிச்சாமி எப்படிச் சமாளித்தான் என்றா ஆச்சரியப்பட்டார்கள்?  அது இல்லை.  இந்தி தெரியாத இவன் எப்படி டெல்லிக்குப் போய்ச் சமாளித்தான் என்பதுதான் அவர்களின் ஆச்சரியத்திற்கான காரணம். ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் படித்துவிட்டு, பக்கத்து ஊரில் மேல்படிப்புக்குச் சென்று முக்கி முக்கிப் பத்தாம் வகுப்புத் தேறியவன் […]

மேலும்....