சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

எந்த மை உண்மை? ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப் பட்டிருந்தார். எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?  சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள்.  வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.  சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள்.  சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை. நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.  […]

மேலும்....

பெண்கள் மயங்கும் படிப் பேசுவதே மாந்திரிகம்

ஜோதிடம், மாந்திரீகம் என்ற இரண்டும் இன்றைய பெரும்பாலான மக்களை ஆட்கொண்டு அடிமைப்படுத்தி யிருக்கும் போதை என்று சொல்லலாம். பிறப்பு முதல் இறப்புவரை நடைபெறும் நல்ல கெட்ட காரியங்களைத் தீர்மானிப்பது பெரும்பான்மையான இல்லங்களில் ஜோதிடமே.  ஒரு மணி நேரம் பேசி, மன நலப் பயிற்சி எடுத்துக் கொண்டு மக்களின் அகக் கருத்துகளை எடுத்துச் சொல்லி, அதற்கான பரிகாரங்களையும் விளக்கி பணம் கறந்து விடுகின்றனர். இவர்களை இந்துத்துவாக்களும் ஊக்கப்படுத்துகின்றனர். ஜோசியர்களிலும், ஜோதிட சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள் இருக்கிறார்கள்.  அதில் நல்ல […]

மேலும்....

கொசுக்கள் ஏன் சிலரை மட்டும் அதிகமாகக் கடிக்கின்றன?

கொசுக்கள் எல்லோரையும் கடித்து இன்புறுகின்றன.  அவற்றில் சில அடிபட்டுத் துன்புறுகின்றன அல்லது ரத்தம் கசிந்து இறக்கின்றன.  ஒரே வீட்டில் இருப்பவர்களில் சிலர் நிறைய கடிபடுகிறார்கள், சிலர் தப்பித்துக் கொள்கிறார்கள். இந்தப் பாரபட்சத்தை ஆராய விஞ்ஞானிகள் தளைப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்களின் ஆராய்ச்சியின் முடிவு என்ன? பூச்சிகளுக்கு நுகரும் தன்மை மிகச் சிறந்த அளவில் வளர்ந்திருக்கிறது.  அவை இத்திறமையை உபயோகித்து நெடுந்தூரம் தங்கள் இலக்கை நோக்கிப் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை.  தற்பொழுது இங்கிலாந்தில் ராத்தம்ச்ட் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் […]

மேலும்....

துளிக்கதை

கண் ஏங்க சுரேசுக்குக் கண்ணு வலின்னு படுத்துக்கெடக்காங்க என்றாள் மனைவி காளியம்மாள். ஏன் என்னாச்சு என்று கேட்டுக்கொண்டே மகனின் பக்கத்தில் வந்து அமர்ந்து கண்களை இரு விரல்களால் நீவிப் பார்த்தார் மாரியப்பன்.  என்ன கண்ணு இப்படிச் செவந்து போயிக்கெடக்கு என்றார். அவனும் ஒரு வராமாத்தான் கண்ணு வலிக்குங்கிறான்.  நாட்டரசன் கோட்டை கண்ணாத்தா கோயிலுக்கு உப்பு வாங்கிக் கொட்டணும்னு நேத்திக்கடன் இருக்குனு சொல்றேன் கேட்க மாட்டீங்கிறீங்க. நேத்திக்கடன் இருக்கட்டும் முதல்ல ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப்போயிக் காட்டுவோம் என்றார்.  அரசு மருத்துவ […]

மேலும்....

பளீர்

சொர்க்கமும் நரகமும் ஒரு சிலர் ராஜபோக வாழ்க்கை வாழ்வதற்காகவும், மிகப் பலரை அச்சுறுத்துவதற்காகவும், மதவாதிகளால் சொர்க்கம், நரகம் என்ற வார்த்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.  எல்லா மதத்தினரும், மனிதன் தானம்/புண்ணியம் செய்தால் இறந்தபிறகு சொர்க்கத்திற்குப் போவான் என்றும், பாவம் செய்தால் நரகத்திற்குப் போவான் என்றும் கூறுகின்றனர்.  எந்த மதவாதியும் இதுவரை யார் யார் எப்பொழுது சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ சென்று வந்தார்கள் என்ற விபரம் சொல்லவில்லை.  தற்பொழுது விஞ்ஞானிகள் அறிவுப் பூர்வமாக சூரியன், சந்திரன், புதன், வியாழன் போன்ற கிரகங்கள் பூமியிலிருந்து […]

மேலும்....