அந்தோணியார் கோவில் மணி ஓசை

– மே.அ.கிருஷ்ணன் விடிந்தால் நடிகை ரோசரி தேவி முனிராஜ் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு! நள்ளிரவு மணி இரண்டாகியும் புரண்டு படுத்த ரோசரிக்குத் தூக்கமே வரவில்லை. மனம் பட்டாம்பூச்சு போல அங்குமிங்கும் ஓடிக் கொண்டேயிருந்தது. கடந்தகால நினைவுகள் சிலருக்கு மலரும் நினைவுகளாக அமையும். ஆனால், ரோசரிக்கோ புயல் நடுவே சிக்கிச் சீரழியும் கப்பலைப் போலவே அமைந்துவிட்டது. அவளுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள இப்பொழுது சித்தி அந்தோணியம்மாள் தவிர யாருமே இல்லை. பவானி ஆற்றங்கரையில் உள்ளது அந்தச் சின்னக் கிராமம். […]

மேலும்....

எனது நம்பிக்கை வெளியில்…

– சிந்து நக்கீரன் (அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஒருவரின் எண்ணங்கள்) நான் நாத்திகக் கொள்கைக்கு மாறுவதற்கு முன் அடிக்கடி தொழுது கொண்டிருந்தேன்.  முதன் முதலாக எனது அய்ந்தாவது வயதில்  தொழத் தொடங்கிய  நிகழ்ச்சி  எனது நினைவில் உள்ளது. எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் மத விழா ஒன்றிற்கு என்னை என் குடும்பத்தினர் எடுத்துச் சென்றிருந்தனர். நாத்திகர்களால் வளர்க்கப்பட்டு வந்த எனக்கு உண்மையிலேயே மதத்தைப் பற்றி அதிகமாகத் தெரியாது. இந்த விழாவில் பொழுதுபோகாத தால், சுற்றிப் பார்க்க வேண்டும் […]

மேலும்....

புதுப்பாக்கள்

அவனும் இவனும் ஆண்டுக்காண்டு அகலமும் விரிந்தார்அய்யன் அருள் எனஅய்யர் வாய்மலர்ந்தார் மாடிமேல் மாடியாய்மவுசும் கூடினார்வெள்ளியும் தங்கமும்வகையாய் தேடினார் மாற்றுக் கோவணம்முருகனுக் கில்லை!வீற்றிருந்தானேமலையதன் மேலே!! – மா.கண்ணன், திருநெல்வேலி காதல் அன்பை கீதை, குரான், பைபிள்என மதம் கு(பி)றித்துபோதிப்பதில்லைகாதல்! – வளியன், திண்டுக்கல் அப்பனும் ஆத்தாளும்! பார்வதியின் உடம்பிலிருந்து திரட்டியஅழுக்கிலிருந்து பிறந்தவன்தான்ஆனைமுகக் கடவுளென்றால்அவனுக்குப்பரமசிவன் எப்படிஅப்பன் ஆவான்? பரமசிவனின்இந்திரியம்ஆறாய்ப் பெருகிஓடிஆறுகிளைகளாய்ப் பிரிந்துஅதிலிருந்து பிறந்தவன்தான்ஆறுமுகக் கடவுளென்றால்அவனுக்குப்பார்வதி எப்படிஆத்தாள் ஆவாள்? ******* வயிற்றில் பசியோடுகையில் திருவோடுஏந்தியபோது…சில்லரைக் காசுகளேவிழுந்தன!காவி கட்டிகமண்டலத்தோடுஆசிரமம் அமைத்துஅமர்ந்த பின்பு..கோடி கோடியாய் […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1. சேலத்தில்  ராஜகோபாலாச்சாரியாரும் ஈரோட்டில் ஈ.வெ. ராமசாமியும் நகர் மன்றத் தலைவர்களாக இருந்தபோது, ஈரோட்டின் நிர்வாகத்தைக் கண்டு வியந்த ராஜகோபாலாச்சாரியார் பெரியாரிடம் கேட்ட உதவி யாது? அ) நீங்களே சேலத்திற்கும் சேர்மனாக இருங்கள் என்றார் ஆ) உங்களுடைய சானிட்டரி இன்ஸ்பெக்டரை எங்களுக்குக் கொடுங்கள் என்றார்  இ) ஈரோட்டின் நிர்வாக அதிகாரியைச் சேலத்திற்கு மாற்றுங்கள் என்றார் ஈ) தாங்களே ஒரு வாரம் சேலத்தில் தங்கி நிர்வாகத்தைச் சீர்படுத்துங்கள் என்றார். 2.    ஓர் உயிரைப் பட்டினிபோட்டுச் சாகடிப்பதைவிடக் கொடுமையானது எது […]

மேலும்....

வஞ்சகம் வாழ்கிறது – 3

புரட்ட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இரணியன் (அல்லது) இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம்) – எழுதியவர் ;  ந.சேதுராமன், திண்டிவனம் பொன்: அடடே! எப்படி எங்கள் இளவரசர் பேரைத் தெரிஞ்சுக்கிட்டீங்க? காங்: முக்காலமும் உணர்ந்து சொல்லக்கூடிய ரிஷீஸ்வரர்கள் எங்களிடமுண்டு. சாத்தப்: முக்காலம்னா? காங்: கடந்த காலம்! இப்போது நடைபெறுகின்ற காலம். இனி நடக்கப்போற எதிர்காலம். இதை எல்லாம் கணித்துச் சொல்லக்கூடிய வல்லமை பெற்றவங்க எங்களிடம் உண்டு. இளவரசர் எங்கே வந்திருக்கிறார்? ஏன் வந்திருக்கிறார்? சொல்லட்டுமா? […]

மேலும்....