திரைப்பார்வை – பாலை

தமிழ்த் திரைப்படம் ஒன்று முதல் முதலாக தமிழ்நாட்டின் தொன்மை நாகரிகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.சங்க காலத் தமிழர் வாழ்க்கையை இலக்கியங்களில் மட்டுமே படித்துள்ள நமக்கு அதனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் அறிமுக இயக்குநர் ம.செந்தமிழன். பாலை என்ற இந்தப் படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது எனலாம். தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கும் வந்தேறிகளுக்கும் இடையில் நடந்த போரே படத்தின் மய்யக் கரு. வளமான நிலப் பகுதியில் வாழ்ந்துவரும் முல்லைக்குடி மக்களை வந்தேறிகளான […]

மேலும்....

செய்தியும் – சிந்தனையும்

ஆணாதிக்க அப்பாக்கள் தன் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் இயல்புடையவர் வங்க எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின். மதங்களை விமர்சித்தும் பெண்ணுரிமைக்கு ஆதரவாகவும் பேசிவருபவர். அண்மையில் இந்தி நடிகையும், இந்திய அழகிப் பட்டம் பெற்றவருமான பிரியங்கா சோப்ராவின் தந்தையின் கருத்து ஒன்றைக் கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கள் மகள் பிரியங்காவை ஆண் பிள்ளையைப் போலத்தான் வளர்த்திருக்கிறோம்; அவள் எங்களுக்கு மகனைப்போல… என்று அவர் சொன்னதுதான் நஸ்ரினின் விமர்சனத் துக்குக் காரணம். என்ன அறிவுகெட்டதனமான பேச்சு? இது இன்னும் பெண் குழந்தைகள் […]

மேலும்....

மெல்லினம் அல்ல வல்லினம்

உலகின் சமபங்கு அளவிலுள்ள பெண்கள் சமமான வாழ்க்கை வாழ்கிறார்கள் எனக் கூற முடியாது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி மனித இனத்தில் முதலில் தோன்றியது பெண்தான். பின்னர்தான் ஆண் வர்க்கம்  தோன்றியது. பெண் சமூக ரீதியாக விலை மதிப்பற்றவளாக இருக்கிறாள். உலகில் உயிர்கள் தோன்றவும் வாழவும் பெண் இன்றியமையாதவள். உலகில் ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய இனத்தை நிலைநாட்டவே போராடிக்கொண்டி ருக்கிறது. ‘survival of life’ என்பதுதான் ஒவ்வொரு இனத்தின் வாழ்க்கை மந்திரமாக உள்ளது. தொடர்ந்து வாழ்வதற்கு தன் இனத்தைப் பெருக்குவது […]

மேலும்....

பூமியைப் போன்ற புதிய கோள்

பூமியைப் போன்ற சுற்றுச் சூழல் அமைந்த, உயிரினங்கள் வாழ்வதற்கு இயலும் புதிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலார்கள் கூறுகின்றனர். கிலிஸ் 581ஜி என்று அழைக்கப்படும் இந்தக் கோள், பூமியில் இருந்து 123 டிரில்லியன் மைல் தொலைவில் இருப்பதாகும். கோல்டிலாக் மண்டலம் அல்லது உயிரினம் வாழும் மண்டலத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தை இந்தக் கோள் சுற்றி வருகிறது. விண்இயல்பியல் பத்திரிகையில் வெளியாகி உள்ள கட்டுரை ஒன்றில், இந்தக் கோளில் திரவ வடிவில் தண்ணீர் அதன் மேற்பரப்பில் இருக்கக்கூடும் என்றும், […]

மேலும்....

மனம் இருப்பது மார்புக் காம்பிலா? – கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு மறுப்பு

மனித உடலில் மனம்: திருச்சிப் பதிப்பு: தினமலர் நாளேடு, 27.07.2011 இதில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.அந்தச் செய்தியினைக் கீழே படியுங்கள். மனித உடலில் மனம் எங்கு உள்ளது? என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர் என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கோவை பண்பாட்டு ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த குறியீடுகள் – கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்கள் திருச்சி. சுபாஷ் சந்திரபோஸ், தேசியக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் ராம் குமார் மற்றும் ஸ்தபதி ஆகியோர் தெரிவித்ததாவது: நம் நாட்டு ஞானிகள் மனித […]

மேலும்....