தொண்டர்களுக்கு ஊக்கம்

– கோ. ஒளிவண்ணன் 1999ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தபோது, எனது வாழ்வே ஒரு பெரிய வெற்றிடமாக எனக்குத் தோன்றியது.  எனது வாழ்நாள் முழுவதிலும் என்னை வடிவமைத்து வழிநடத்தி வந்த ஒருவர் என்னுள் ஒரு வெறுமையை ஏற்படுத்தி விட்டுச் சென்றார் என்பதை என்னால் எளிதில் நம்பவே முடியவில்லை. எனது தத்துவ ஆசானாக, வழிகாட்டியாக மட்டுமே எனது தந்தை விளங்கவில்லை. எனக்குத் துயரங்கள் நேர்ந்த சமயங்களில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கியவர் அவர். புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் தலைமை […]

மேலும்....

கொள்கை வேழம்

மேடையில் ஏறி நின்று மேதகு கருத்தை எல்லாம்கோடையின் மழையைப் போலே கொட்டிய சிறுவன் அன்று!ஓடையில் விரைந்து நீராய் ஓடிய வயதின் பின்பும்மேடையில் பெரியா ரியலை முழங்கிடும் தலைவர் இன்று! காரிருள் நீக்கு தற்குக் காற்றிலே சொல்வி தைத்தபேரறி வாளன் எங்கள் பெரியாரின் அருமைத் தொண்டர்ஊரெலாம் சுற்றிச் சுற்றிச் உழைப்பினை மக்கட் கீந்தசீர்மிகு தந்தை கண்ட சிறியநற் கொள்கை வேழம்! தந்தையின் கொள்கை என்றும் தளர்வுறா திருந்து காத்துமுந்தைய அவரின் பேச்சு முழுவதும் முனைந்து சேர்த்துசிந்திடும் வியர்வை எல்லாம் […]

மேலும்....

இவர்தான் ஆசிரியர்

ஆர்வலர்கள் மீதான அக்கறை சென்னை பெரியார் திடலில் நடிவேள் ராதா மன்றம் கட்டிக்கொண்டிருந்த நேரம் அது. கட்டடப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்போது மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பெரியாரின் மீதும் இயக்கத்தின் மீதும் கொண்ட ஆர்வம் காரணமாக 25 ஆயிரம் ரூபாயை நன்கொடையாகக் கொடுக்க பணத்தைக் கொண்டு வந்துவிட்டார். அந்த நன்கொடையை ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கொடுத்தார். நிதியை யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளலாம்தான். ஆனால், ஆசிரியர் அந்த ஒப்பந்தக்காரர் கொடுத்த நிதியை உடனே வாங்கிவிடவில்லை. ஏனென்றால் […]

மேலும்....

விடுதலைக் குடும்பத்துக்கு பெரியார் அறிவுரை

நிருவாகத்திலிருக்கும்போது, பணியிலிருக்கும்போது சில குறைகள் ஏற்படலாம். துணைவர்களிடமே உயிருக்கு யிரானவர்களிடமே குறை ஏற்படுகிறது. அண்ணன் தம்பிகளிடம், தந்தை மகனிடம்கூட சில குறைகள் ஏற்படத்தான் செய்கின்றன. இது இயற்கை. இதைப் பெரிதுபடுத்தக் கூடாது. சிலரது சுபாவம் ஒரு மாதிரியாக இருக்கலாம். பொதுவாகவே ஒவ்வொருவருக்கொரு சுபாவம் இருக்கும். அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அவர் கோபக்காரர்; அந்தக் கோபம் போனால் நன்றாக நடப்பார் என்கிற தன்மையை உணர்ந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும். சிலருக்குத் தேவை இல்லாமலே பொய் சொல்கிற […]

மேலும்....

அரை நூற்றாண்டுக் காலம் ஆசிரியர்

“உண்மையைச் சொல்லுகிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி, வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன் என்று எழுதினார் தந்தை பெரியார் (விடுதலை – 10.8.1962).

மேலும்....