கடவுள் வாழும்(?) கோவிலிலே….

சிறீபெரும்புதூர் டி.எம்.ஏ. தெருவில் வசிக்கும் அப்பாதுரையின் மகன் குமார் என்ற விஜயராஜ் அங்குள்ள இராமானுஜர் கோவிலுக்குச் செல்லுமுன் கோவில் குளத்தில் இறங்கி கால்களைக் கழுவியபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தார். புதுவை, சாரம் பூங்குணம் தெருவில் வசிக்கும் சரவணன் மகன் தினேசுடன் புதுவையை அடுத்துள்ள புத்துப்பட்டு அய்யனார் கோவிலுக்குச் சென்று சபரிமலை செல்ல மாலை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தபோது தனியார் பேருந்தில் மோதி உயிரிழந்தனர். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்தின் […]

மேலும்....

தன்னலமற்ற தன்மை

நல்ல கல்வி அறிவுள்ளவர்: தொழில் ஆற்றலுள்ளவர்: பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய்திருந்தாலும் நல்ல அளவுக்குப் பணம் சம்பாதித்திருப்பார். இதையெல்லாம் விட்டு பொதுத்தொண்டு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொதுமக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்கிற தன்னலமற்ற தன்மைக்காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். – ஆசிரியர் கி. வீரமணி அவர்களைப் பற்றி […]

மேலும்....

சிகாகோவில் திருப்பாற்கடல்

மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களின் நகைச்சுவை ஒரு தனித் தன்மை வாய்ந்தது. அவர் மேடையிலேயே நகைச்சுவை கலந்து பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். எதிரிகளும் ரசிக்கும்படியான ஆபாசமில்லாத நகைச்சுவையாக இருக்கும். அடுக்குமொழி, எதுகை மோனை, வார்த்தை ஜாலங்கள் நிறைந்திருக்கும். ஆனால், தனியாகப் பேசும் போதும் கிண்டல் செய்யும் போதும் மனதைப் புண்படுத்தாத, மகிழ்ச்சி கலந்த நகைச்சுவை என்பது அவரது தனிச்சிறப்பாகும். ஒருமுறை குளிர்காலத்தில் சிகாகோவில் ஒரு ஏரியைப் பார்த்தோம். அங்கு தண்ணீரே தெரியாமல் பனி இரண்டடி உயரம் […]

மேலும்....