குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்
பார்ப்பனரின் ஜாதித்திமிரும், புல்லாங்குழல் வித்வான் திரு.சாமிநாதப் (பிள்ளை) அவர்களின் சுயமரியாதையும் (பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத வித்வான்களைக் கச்சேரிகளில் மாத்திரம் இழிவுபடுத்துவது அல்லாமல் சங்கீத மாநாடுகள் கூட்டி நம்மவர்களை வரும்படி செய்து அங்கேயும் இழிவுபடுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். 1930 இல் காரைக்குடியில் நடந்த சங்கீதக் கச்சேரியில் புல்லாங்குழல் வித்வான் திரு. சாமிநாதப் பிள்ளை அவர்களை ஜாதித் திமிர் கொண்ட பார்ப்பன வித்வான்களும், பார்ப்பனர்களும் எப்படி இழிவுபடுத்தினார் கள் என்ற நிகழ்ச்சி கீழே தரப்படுகிறது. இச்செய்தி திராவிடன் பத்திரிகையில் அக்காலத்தில் வெளிவந்திருக்கிறது. […]
மேலும்....