தமிழர்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள்

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக்குறைய இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு அடக்கப்பட்டு, தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும். தி.மு.க. தோன்றுவதற்கான வரலாறு அது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் திராவிடர் என்ற சொல் சூத்திரர் என்ற சொல்லுக்குப் பிரதிச் சொல்லாகக் கருதப்படும் சொல்லாக இருப்பதாய்க் கருதப்பட்டு வந்ததால், அப்பெயரைக் கழகத்திற்கு வைக்க ஆந்திரர்கள் ஆட்சேபித்ததால் அக்கழகத்திற்கு தென் இந்தியர் விடுதலைக் கழகம் என்பதாகப் பெயரிட்டுத் (South Indian Liberal Federation) துவக்கினார்கள். […]

மேலும்....

குரல்

கல்வி வளர்ச்சியைத் தீவிரப்படுத்த அடிப்படைப் பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை. பயன்பாட்டு அறிவு இருந்தால் மட்டும் போதாது. வேலைவாய்ப்பு தரும் கல்வியே இப்போதைய தேவை. அறிவாற்றல் என்பது சொத்தாக மாற்றப்பட வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம் மூலம் சமூக மாற்றத்தைச் சாதிக்க முடியும். க.திருவாசகம், துணைவேந்தர்,சென்னைப் பல்கலைக்கழகம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகின்றன.  பெண்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அவர்களின் கணவர்களின் சம்மதம் குறித்தும் கேட்கப்படுகிறது.  சட்டம்கூட அவர்களுக்கு இணக்கமானதாக இல்லை.நாகபூஷணம், மேனாள் துணைவேந்தர், அம்பேத்கர் […]

மேலும்....

பதிவுகள்

மக்கள் புரட்சிக்குப்பின், எகிப்தில் புதிய அமைச்சரவை மார்ச் 8 இல் பதவிப் பொறுப்பேற்றுள்ளது. பள்ளிகள் அருகே தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடைவிதித்தும், தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 9இல் ஆணையிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங்கின் மகன்  அகிலேஷ் மார்ச் 9 இல் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல்பற்றி சி.பி.அய் மேலும் […]

மேலும்....

தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும் , அ.தி.மு.க. அணியின் வேதனைகளும்

5 ஆண்டுகளில் அடைமழைச் சாதனைகள்


ஃ    ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி; 1 கோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயன்.

ஃ மாதந்தோறும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு;

ஃ    மானிய விலையில் மளிகைப் பொருள்கள் என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள்;

ஃ    22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி;

ஃ    விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி 2005-2006இல் 9 சதவிகிதம்; 2006-2007 கழக அரசில் 7 சதவிகிதம்; 2007-2008இல் 5 சதவிகிதம்; 2008-2009இல் 4 சதவிகிதம்; 2009-2010இல் பயிர்க்கடன் வட்டி ரத்து; 2006க்குப்பின் இதுவரை 35 லட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஃ    2005-2006இல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010-2011இல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய்; சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்; ஃ    மீண்டும் புதுப் பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு;

ஃ    பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006இல் 50 சதவிகித காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியதால் 2005-2006இல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில்; 2009-2010 ஆம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர்க் காப்பீடு செய்தனர். கடந்த 4 ஆண்டுகளில் 9 லட்சத்து 643 ஆயிரம்  விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது;

ஃ    21 லட்சத்து 23 ஆயிரத்து 491 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 1012 கோடியே 78 லட்சத்து 79 ஆயிரத்து 420 ரூபாய் உதவித் தொகை;

ஃ    காமராஜர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள் என பள்ளிகளில், கல்வி விழா;

ஃ    2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ, மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாள்களும் முட்டைகள்;  வாழைப் பழங்கள்;

ஃ    தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 லட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து. ஃ    பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின் படிப்புக் கட்டணங்கள் ரத்து; 2010-2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி. வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து.

ஃ    படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை;

ஃ    ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 லட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்;

ஃ    ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு.

ஃ    தொழிற்கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து. ஃ    சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் 5 புதிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள்; ஃ    2006-க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பென்னாகரம், திருப்பத்தூர் (வேலூர்), வேதாரண்யம் ஆகிய 14 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்;

ஃ    மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்;

ஃ    அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்.

ஃ    பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமென சட்டம்;

ஃ    நூறாண்டுக் கனவை நனவாக்கிச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைப்பு. ஃ    அருந்தமிழ்ச் சான்றோர் 134 பேரின் நூல்கள் நாட்டுடைமை; 9 கோடியே 85 லட்சம் ரூபாய்  பரிவுத் தொகை;

மேலும்....

சமூகப்புரட்சி சகாப்தம் தொடர மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களியுங்கள்

ஜனநாயகத்தில், நல்லாட்சி என்பது அனைத்து மக்களின் தேவைகளையும் அறிந்து, அனைத்து மக்களது வாழ்க்கை, வளம் மிக்கதாக, நிம்மதியானதாக அமையும் வகையில் அமையப் பாடுபடும் ஆட்சியேயாகும். தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஆட்சி சமூகப்புரட்சிக்கு வழிவகை செய்யக்கூடிய ஆட்சியாக அமைவது மிகவும் முக்கியமாகும் என்ற  எண்ணத்துடன் முதல்வர் கலைஞர் அவர்கள் 5 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது அளித்த தேர்தல் அறிக்கையின் அத்துணை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, 5 ஆண்டுகாலத்தில் சொன்னதைச் செய்தோம் என்று மார்தட்டிச் சொல்லும் அளவுக்குச் சாதனை புரிந்தார்! தேர்தல் […]

மேலும்....