சர்ச்சை பாபா

மனிதரில் புட்டபர்த்தி சாய்பாபாவும் ஒரு மனிதர்; நமக்கு ஒன்றும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் மனிதராக மட்டுமே இருந்திருக்கவில்லை. பகவானாகவும்(?) இருந்தார். அதனால்தான் சர்வசக்தி படைத்த அந்த பகவானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாமா எனக் கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர் மருத்துவமனை அமைத்தார்;அதில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளித்தார்; இது நல்ல செயல்தான்,வரவேற்கிறோம். ஆனால், இந்த நலப்பணிகள் செய்ய அவர் என்ன செய்து பணத்தை ஈட்டினார்? தன்னைச் சர்வசக்தி உள்ளவராகக் காட்டிக்கொண்டார். அதற்காக சில தந்திரங்களைக் கையாண்டார். அதில் ஒன்று, பகவான் பாபா நோயுற்ற ஒருவரைத் தொட்டார்; அந்த நோயாளியின் நோய் குணமானது என தன் பக்தர்களை நம்பச் செய்தது. இந்தச் செய்தியைப் பரப்பி அப்பாவிப் பக்தர்களைக் கவரும் போதுதான் பகுத்தறிவாளர்கள் கேட்டார்கள். சரி,இது உண்மையானால் சாய்பாபா ஏன் மருத்துவமனை கட்ட வேண்டும்? நோயாளிகளையெல்லாம் வரிசையாக நிற்க வைத்து சாய்பாபா அவர்கள் மீது கையை வைத்தால் போதுமே! நோய் பறந்தோடிவிடுமே!

மேலும்....

கண்ணீரிலும், செந்நீரிலும் மிதக்கும் தமிழர்களுக்கு மீட்சி வேண்டும்!

ஈழத்தில் அங்குள்ள தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் வாழ்வுரிமைக்காக நடைபெற்ற உரிமைப் போரினைத் தனது ராணுவத்தாலும், வெளி ஆதிபத்திய சக்திகளின் ராணுவம் மற்றும் பல்வேறு நிதி ஆதாரம் உட்பட பெற்று தமிழின அழிப்பு வேலையை சிங்கள ராஜபக்சே அரசு நடத்திய காரணத்தால் அய்.நா. மன்றத்தால் இலங்கையின் ராஜபக்சே அரசு, போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மீது ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்திடச் செய்து, அதன்மீது நடவடிக்கை எடுக்கவும், உடனடியாக மத்திய (இந்திய) அரசு நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.

மேலும்....

அட்சய திரிதியை அன்று நகைகடையில் 45 பவுன் கொள்ளை

அட்சய திரிதியை அன்று நகைகடையில் 45 பவுன் கொள்ளை மானிடா…. உன் வியாபாரத்துக்கு நான்தான் காரணம்னு நீ எப்படி நம்புகிறாயோ…. அது போல என்னை வணங்கிவிட்டுத் தொழிலுக்கு வந்த திருடனுக்கும் நான் படியளக்க, வேணாமா?  அதான் இப்படி, சாரி….!

மேலும்....