ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர்

தந்தை பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பெண்களின் முன்னேற்றம் தமிழ்நாட்டில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பெண்கள் குடும்ப அமைப்பினையும், சமூக அமைப்பில் முக்கிய அதிகாரங்களையும் ஒருசேர நிருவாகம் சிறந்த பங்களிப்பாளர்கள் என்பது யாவரும் அறிந்ததொன்று. அந்த வகையில் வரலாற்றுப் புகழ்வாய்ந்த ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்கிற பெருமைக்குரியவராக விளங்குகிறார் ச.திவ்யதர்ஷினி அய்.ஏ.எஸ் அவர்கள். அவரது வாழ்க்கைப் பாதையில் கடந்துவந்த சுவடுகள் பற்றிக் கூறுகையில்,சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் இரண்டாவதாகப் பிறந்தேன். ஆரம்பத்தில் வழக்குரைஞராக […]

மேலும்....

வைத்தியநாத அய்யரின் மோசடி அம்பலம்! -நேயன்

தொ.பரமசிவன் ஆய்வில்….கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும் போது கோயில் நுழைவு தானாக நடைபெறும் என்பது அம்பேத்கர் கருத்து, மறு வாரம் (1933, பிப்ரவரி 11) காந்தியடிகள் புதிதாகத் தொடங்கிய அரிஜன் இதழுக்கும் இக்கருத்தையே அம்பேத்கர் செய்தியாக அனுப்பி இருந்தார். இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் முதிர்ந்து கொண்டு வந்தன.பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களில், அம்பேத்கரைத் தவிர மற்ற இருவரும் தமிழ்நாட்டவர் ஆவர். ஒருவர் ராவ்பகதூர் (ரெட்டமலை) சீனிவாசன். மற்றவர் எம்.சி.ராஜா. இவர்களில் சீனிவாசன் […]

மேலும்....

புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ -எம்.எப்.ஐ.ஜோசப் குமார்

தமிழ்மொழி இலக்கியத்தில், பெருக்கச் சிறப்புமிக்க, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களுக்கு மாற்றாக, சிறு வடிவம் தாங்கி உருவானவை சிற்றிலக்கியங்கள் என்று முறைப்படுத்தப்பட்டன. உலா, கோவை, பதிகம் முதலானவற்றை உள்ளடக்கிய இச்சிற்றிலக்கியத் தொகுதியில், பிள்ளைத்தமிழும் ஒன்று.தொல்காப்பியம், குழவி மருங்கினும் கிழவ தாகும் என்று சொல்லுகிறது. இப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டு தான் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, பன்னிரு பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் ஆகிய நூல்களிலும் பிள்ளைத்தமிழுக்கான இலக்கண வரையறைகள் கூறப்பட்டுள்ளன. பன்னிரு பாட்டியலின் […]

மேலும்....

ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!

நாட்டில் உள்ள பல படித்தவர்களும், பதவியில் உள்ள பெரிய மனிதர்களில் பலரும், பாமரத்தனத்திலிருந்து அறியாமையிலிருந்து விடுபட முடியாமல், பேராசைச் சிறைக்குள் கிடந்து உழலுவதற்கான மிகப் பெரிய காரணங்களில் ஒன்று _ ஜோதிடம் என்ற ஒரு போலி விஞ்ஞானத்தை நம்பி பொருளையும் அறிவையும் இழப்பதாகும்! எத்தனையோ கொலைகளும், தற்கொலைகளும் நரபலிகளும் நாட்டில் நடைபெறுவதற்கு அடிப்படையான காரணம் இந்த ஜோதிட மூடநம்பிக்கையேயாகும்! அறிவியல் (Science) வேறு; போலி அறிவியல்(Pseudo Science) வேறு. படித்த தற்குறிகளுக்கே கூட இது விளங்குவதில்லை! வானவியல் […]

மேலும்....

இரைப்பை, உணவுக்குழாய் பின்னோட்ட நோய்

-மரு இரா.கவுதமன் இரைப்பையும் (Stomach), உணவுக் குழாயும் (Esophagus), நம் உணவு மண்டலத்தின் ஆரம்ப நிலை உறுப்புகளாகும். வாயின் உள்புறம், தொண்டையின் முடிவில் துவங்கி, வயிற்றில் முடியும் உணவுக் குழாய் 10 அங்குலம் (25 செ.மீ) நீளமுடையது. மூச்சுக்குழாய்க்கும், வயிற்றையும் பிரிக்கும் இடைத் தசைச் சுவரின் (Diaphragm – உதரவிதானம்) இடைவெளியின் வழியாகக் (Hiatus) கீழிறங்கி இரைப்பையோடு இணையும். தசைகளால் ஆன இக்குழாய், சுருக்கு தசை (Sphincter) யால் மூடப்பட்டிருக்கும். கீழ்நோக்கி அசையும் அடைப்பிதழ்கள் (Valves)) போல் […]

மேலும்....