ஆலமரம் -ஆறு.கலைச்செல்வன்

ஆகா! எவ்வளவு பயன் தரும் மரம்!வெயிலில் வாடும் மக்களுக்கு நிழல் தருவதில் ஆலமரம் முதன்மையானது.அது மட்டுமா! பல நூறு பறவைகளுக்குப் புகலிடமாகவும் அமைகிறதே!ஆலமரத்தின் விழுதுகள், பால், பழங்கள் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மக்களுக்குப் பயன்தரவல்லன. மலையப்பன் வசித்துவந்த கிராமத்திலும் பல ஆலமரங்கள் ஒரு காலத்தில் இருந்தன. ஆனால் அவை அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த தோப்பில் ஒரே ஒரு ஆலமரம் மட்டுமே மிஞ்சி இருந்தது. ஒரு நாள் மாலை வேளையில் மலையப்பன் அந்தத் தோப்புப் […]

மேலும்....

தவத்திரு குன்றக்குடி அடிகளார் மறைவு!

7.3.1995 அன்று சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு பினாங்கு சென்றடைந்தேன். என்னுடன் சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் திரு.சந்திரன் அவர்களும் உடன் வந்தார். பினாங்கு விமான நிலையத்தில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் திரு.ரெ.சு.முத்தய்யா, பொதுச் செயலாளர் திரு.பாலகிருஷ்ணன், பினாங்கு மாநில தி.க.தலைவர் திரு.ச.புட்பநாதன், திரு.அண்ணாமலை, சுங்கைப் பட்டாணி திருவாளர் வேலு, திருமதி வேலு, துரை.அசோகன், செ.குணாளன் ஆகியோர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த தோழர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டு சிறப்பான விருந்து கொடுத்து, மகிழ்ந்து உரையாடினார்கள். […]

மேலும்....

நான் யார்?-தந்தை பெரியார்

அன்புள்ள திராவிட மந்திரிமார்களே! நான் யார்?உங்கள் சொந்த எதிரியா?உங்கள் இன எதிரியா?உங்கள் கொள்கை எதிரியா?உங்கள் உத்தியோகம், பதவி பற்றிப் பொறாமைப்படுகிறவனா?அல்லது இந்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பவனா? அப்படிச் செய்தாவது, ஏதாவது பலன் பெறவேண்டும் என்கிற ஆசையிலோ, நிலையிலோ உள்ளவனா? இதுவரை என் பொது வாழ்வின் பயனாக நான் ஏதாவது பலன் பெற்றவனா? அல்லது எனது வாழ்க்கைத் தரத்தையாவது உயர்த்திக் கொண்டவனா?உண்மையில் நான் பார்ப்பன துவேஷியா?எந்தப் பார்ப்பனருக்காவது நான் சொந்தத்தில் எதிரியா?டாக்டர் சி. ராஜகோபாலாச்-சாரியாருக்கு நாளைக்கு கருப்புக் கொடி […]

மேலும்....

ஆதிக்கம் அழிக்கும் அணுசக்தி பெரியார்

தந்தை பெரியார் என்றால் மனிதநேயர் என்றே பொருள். மனிதத்தின் மறுபெயர் பெரியார் என்றால் அது மிகச் சரியான கணிப்பாகும். மனிதநேயம் என்பது தன்னைப்போலவே பிறரையும் எண்ணுவது. தனக்குள்ள உணர்வுகள் பிறருக்கும் உண்டு என்று உணர்வது. இந்த உணர்வு இருந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ப நடக்க வேண்டும்; பிறரை நடத்த வேண்டும்.தந்தை பெரியார் எதிர்ப்பது, ஏற்பது, ஒழிப்பது, ஒதுக்குவது, போராடுவது, கருத்துரைப்பது எல்லாமும் மனிதநேய அடிப்படையிலேதான். மனிதநேயம் உள்ளவர் எவரும் ஆதிக்கத்தை எதிர்ப்பர், ஒழிப்பர். ஆதிக்கம் என்பது பலவகையில் […]

மேலும்....