கெடுவான் கேடு நினைப்பான்

கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும்  கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

மேலும்....

வரலாற்றுத் தீர்ப்பு மூவரை விடுவிக்கட்டும்

இலங்கைத்  தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் (பிலேந்திரன், சைமன், மீசை மாதய்யா, ஞானப்பிரகாசம்) உள்பட, இந்தியா முழுவதிலும் உள்ள மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் 13 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 21.1.2014 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ப.சதாசிவம் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மேலும்....

சமூகநீதிக் காவலர் கி.வீரமணி முன்பு நிற்பதே எனக்குப் பெருமை!

மராட்டிய அமைச்சர் புஜ்பால் தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை இந்தியா முழுதும் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் வட மாநிலங்களில் பல நூறுமுறை பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார். இந்த ஒப்பற்ற பணிக்கு உறுதுணையாக உள்ள பெருமக்களைச் சிறப்பிக்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யம் `சமூக நீதிக்கான வீரமணி விருதினை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அந்த வரிசையில்  மராட்டிய மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன்புஜ்பல் அவர்களுக்கு 2013ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா 11.1.2014 அன்று மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில் மராட்டிய மாநில ஆளுநர் கே. சங்கரநாராயணன் விருதினை வழங்கினார்.

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….

சென்னைக் கடற்கரை படைத்த சரித்திரம்

தலைவர்களை ஒருங்கிணைத்த அன்னை மணியம்மையார் இரங்கற் கூட்டம்

அன்னை மணியம்மையார் இரங்கல் பொதுக்கூட்டம்  28.3.78 அன்று இரவு ஏழரை மணியளவில் சென்னைக் கடற்கரையில் உள்ள சீரணி அரங்கில் டாக்டர் ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று கண்ணீர் உரையாற்றிய இந்த மாபெரும் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் இறுதிவரை கட்டுப்பாடாய் கழகத் தோழர்களும் பொதுமக்களும் குழுமியிருந்தனர்.

மேலும்....