மருத்துவ வசதியற்ற குஜராத்

கலை, நிச்சயம் மனிதனைச் சாந்தப்படுத்தக் கூடியது; சந்தோசமளிக்கக் கூடியது. மறுக்கவில்லை. ஆனால், சினிமாவுக்கு மட்டும் ஏன் நம் நாடு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாம் விவாதிக்க எத்தனையோ உண்மையான பிரச்சினைகள் காத்துக்கிடக்க, அமீர் கானா, ஷாரூக் கானா, சல்மான் கானா… இந்த மூன்று கான்களில் யார் சிறந்தவர்? என்றே விவாதித்துக் கொண்டிருக்கிறோமே… ஏன்? நாம் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும்! குஜராத்தில், புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன; நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள்; […]

மேலும்....

தூங்கும் கடவுளுக்கு தங்கம் ஏன்?

– கவிஞர் கலி.பூங்குன்றன் இந்த உலகத்தைப் படைத்தவன், சகலமும் அவனுக்கே உரியது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் கோவிலுக்குக் காணிக்கை கொடுப்பது _ உண்டியல் வைத்துப் பணம் வசூல் பண்ணுவது, பூஜை செய்வதற்கும், வழிபடுவதற்கும்கூட தட்சணை தண்டுவது என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது? கோவில் என்ற ஒன்றை வைத்து பணம் பண்ணுவது, வியாபாரம் செய்வது அல்லாமல் வேறு என்னவாம்? வசதிவாய்ப்புள்ளவர்கள், பதவியாளர்கள் என்றால் கோவிலில் கடவுளைத் தரிசிக்க முன்னுரிமை கொடுப்பது எல்லாம் எந்த வகையைச் சேர்ந்தது? […]

மேலும்....

டீல் ஓகே யா?

சமூக இணையதளங்களில் இருக்கிற பார்ப்பன நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களில் பல பேர் எங்கள் நெருங்கிய நண்பர்களாகவும், பண்பாடு மிகுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான், அதற்காக இன்னும் பன்னெடுங்காலம் பேச எஞ்சியிருக்கிற பார்ப்பன எதிர்ப்பு அரசியலை எங்களால் பேசாமல் இருக்க முடியாது. வேண்டுமானால் ஒரு உடன்பாடு செய்து கொள்ளலாம். தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் தீட்சதர்களாகவோ, பூசாரிகளாகவோ உங்கள் உறவினர்கள் பலர் இருக்கக்கூடும், அவர்களிடம் நீங்களே பேசுங்கள். “இது எல்லாம் அவா கட்டின கோவில், […]

மேலும்....

ஜெபம் ஜெயம் தருமா? – மதிமன்னன்

பழங்கதைப் பேச்சாளர் ஒருவர், ஒருமுறை எழுதும்போது, கடவுள் சூப்பர் மார்க்கெட் முதலாளி அல்ல, அவரிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கக் கூடாது என்று எழுதினார். பிரபல ஏட்டில் எழுதியதால், பல பேர் படித்திருப்பார்கள். ஆனால், எத்தனைப் பேர் அதனைப் புரிந்து அதன்படி நடக்கிறார்கள்?

மேலும்....

நாத்திகர்களின் பரப்புரை எப்படி இருக்க வேண்டும்?

– எட்வர்ட் தபாஷ்

மத நம்பிக்கை, கோட்பாடு, பரப்புரை ஆகியவற்றுக்கு எதிராக நாத்திகர்கள் எந்த அளவுக்குக் கடுமையாக தங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பது பற்றி, 2006ஆம் ஆண்டு தொடக்க நிலையில், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தங்களுக்குள்ளேயே நடத்திக் கொள்ள ஆரம்பித்த விவாதம் விரைவில் வேகம் பெற்றது.  நிதானத்தையும், மென்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிலர் வாதிட்டனர்.

மேலும்....