மும்பையில் மூடநம்பிக்கையின் உச்சநிலை

உலகத்தின் மிக அதிகமான செலவில் கட்டப்பட்ட வீடு, பயன்படுத்தப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி கட்டியுள்ள அந்த வீட்டில் குடியேறினால் அவர்களுக்குக் கெடுதல் வரக்கூடும் என்று அஞ்சுகின்றனர். 27 மாடிகளைக் கொண்டு பலநூறு கோடிகளை முழுங்கியுள்ள அந்தக் கட்டிடத்திற்கு அன்டில்லா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சீனத்து ஃடெங் சூயி என்று சொல்லப்படும் மனையடி சாத்திரம் போன்றுள்ள இந்திய வாஸ்து சாத்திரத்தின்படி அந்தக் கட்டிடம் அமையவில்லையாம். சென்ற ஆண்டு நிறைவெய்திய அந்த வீடு மும்பையில் விண்ணை முட்டி நிற்கும் […]

மேலும்....

தமிழர்களை உயர்த்திப் பிடித்த திராவிடர் திருநாள்

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா, திராவிடர் திருநாள் _ தமிழ்ப் புத்தாண்டு _ பொங்கல் விழா மற்றும்  திராவிடர் இயக்க தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை பெரியார் திடலில் ஜனவரி 17, 18, 19 மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நெய்தல் நிலத்தினைப் பிரதிபலிக்கும் விதத்தில் பெரியார் திடல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் பண்பாட்டைப் போற்றும் வகையில் அலங்காநல்லூர் பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சில ஆட்டம், பெரிய […]

மேலும்....

புதுமை இலக்கியப் பூங்கா

ஆண்டவன் துணை – தில்லை வில்லாளன்   எழுத்தாளர், பேச்சாளர், மக்களவை உறுப்பினர், வழக்குரைஞர், சட்ட நுணுக்கம் தெரிந்த நிதியாளர்… என பன்முகங்களில் மிளிர்ந்தவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எழுதுவதில் திறமை பெற்றவர். 20 வயதிற்குள் 6 நாவல்களை எழுதி நூல் வடிவம் கொடுத்த பெருமைக்குரியவர். தம்பி வில்லாளன், என்னிடம் கற்க வேண்டியவைகள் அத்தனையும் கற்ற பிறகுதான் இங்கு வந்திருக்கிறார்.  என பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர். தம்பி, பூமாலை, முன்னணி போன்ற வார இதழ்களை நடத்தியவர் […]

மேலும்....

திரைப்பார்வை

தலைமுறைகள் – சமா.இளவரசன் மொத்தமாக 30 ஆண்டுகளில் 15 படங்கள் தான் தமிழில் இயக்கியிருக்கிறார் இதுவரை! ஆனால், தமிழ்த் திரையின் கதை சொல்லல் தரத்தை, ஒளிப்பதிவை, திரை மொழியை மாற்றியமைத்ததில் ஒளிஓவியர் பாலுமகேந்திராவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது தலைமுறைகள். நாற்பது ஆண்டுகால திரை வாழ்வில் திரைக்குப் பின்னால் இருந்தே இயங்கி வந்த பாலுமகேந்திராவே படத்தின் முக்கியப் பாத்திரமேற்று, எப்போதும் எங்கும் சூடியிருக்கும் தலைப்பாகையைத் தூக்கி வைத்துவிட்டு, ஓய்வு […]

மேலும்....