ராஜகோபாலாச்சாரி ஆகிறார் ரங்கசாமி

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ & இந்தித் திணிப்பு தமிழ்நாட்டில் எண்ணற்ற தனியார் பள்ளிகள் சமச்சீர் பாடத்திட்டத்திலிருந்து, சி.பி.எஸ்.இ முறைக்கு மாறிக் கொண்டிருப்பதால் தமிழக பள்ளிக் கல்வித் துறையே மாநில அரசின் கைகளிலிருந்து நழுவிப் போகிறது என்பதைக் கடந்த இதழில் விரிவாகப் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் புதுவையின் அறிவிப்பு கல்வித் துறையைப் பொறுத்த அளவில் அபாய அறிவிப்பாக அமைந்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை நடைமுறையில் இருந்த தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் மாற்றப்பட்டு, நடப்புக் கல்வி ஆண்டு முதல், அனைத்து […]

மேலும்....

ஜாதிகள் ஒழிந்தால் நாடு முன்னேறும்

மைசூர் அருகே சாமுண்டி மலையடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்தில் நடைபெற்ற ஜெகத்ஜோதி பசவண்ணர் ஜெயந்தி விழா(பசவ ஜெயந்தி விழா)வில் கலந்து கொண்டார் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா. விழாவில் பேசியபோது, நமது நாட்டில் இன்னும் ஜாதிகள் ஒழியவில்லை. கடந்த 850 ஆண்டுகளுக்கு முன்னே ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்டவர் பசவண்ணர். ஜாதிகளை ஒழிக்க நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தியதுடன் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றாகச் சேர்த்து, மனித ஜாதி ஒன்றே, வேறு எந்த ஜாதியும் இல்லை என உலகத்திற்கு அறிவித்தவர். […]

மேலும்....

அன்று ஹீரோ… இன்று வில்லன்!

அய்யர் நடத்தும் அக்சயா ரகசியங்கள் அம்பலம்   2010ஆம் ஆண்டு யூடியூப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் சிஎன்என் ஹீரோ (CNN Heroes) போட்டிக்கு நமது இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவளியுங்கள் என்று விளம்பரம் வந்தது. உலக அதிசயமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றாலும் என்ன அதிசயம் என்றும் கேட்காமல் ஓட்டுக் குத்தும் நம்மவர்கள் இந்தியரை ஆதரிப்போம் என்று கிளம்பினார்கள். அவர் பெயர் நாராயணன் கிருஷ்ணன். இளைஞர். அய்ந்து நட்சத்திர விடுதிகளில் […]

மேலும்....

சிவப்புதான் அழகா? விளம்பர வாய்ப்பை மறுத்த நடிகை

சிவப்பழகு கிரீம்கள் என்று நடிகர் நடிகையரெல்லாம் கோடிகளைப் பெற்றுக்கொண்டு மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை விதைத்துக்கொண்டிருக்க நடிகை கங்கணா ரனாவத் 2 கோடி ரூபாய் விளம்பர வாய்ப்பை மறுத்துள்ளார். அதோடு அவர் எழுப்பியுள்ள மனிதத் தன்மையுள்ள கேள்வி சிந்திக்கத்தக்கது. அழகு பற்றி இங்கு நிலவும் கண்ணோட்டம் குறித்து என் குழந்தைப் பருவத்திலிருந்தே புரிந்துகொள்ள முடிந்ததில்லை. அப்படி இருக்கும் நிலையில், பிரபலமாகக் கருதப்படும் நான் இளைஞர்களிடம் என்ன மாதிரியான முன்னுதாரணத்தை உருவாக்கப் போகிறேன். அழகு கிரீம் விளம்பர வாய்ப்பை (ரூ.2 […]

மேலும்....

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள்

தமிழகத்தில் 6 வயது முதல் 14 வயது வரை பள்ளிக்குச் செல்லாமல் 27,400 குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் 2,794 குழந்தைகளுடன் முதல் இடத்திலும் காஞ்சிபுரம் மாவட்டம் 2,225 குழந்தைகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. நீலகிரி மாவட்டம் 153 குழந்தைகளுடன் இறுதி இடத்தில் உள்ளது. இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தாலும், சில காரணங்களால் குழந்தைகள் இடையிலேயே கல்வியை விடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதனையும் கண்காணித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், […]

மேலும்....