சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்பந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச் சேதிகளாலும், விஷமப் பிரச்சாரங்களாலும் பொதுமக்களுக்குள் சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது.

மேலும்....

மாயா ஏஞ்சலோ ஒரு கூண்டுப் பறவையின் விடுதலை

பிறப்பு:  ஏப்ரல் 4, 1928    |    இறப்பு: மே 28, 2014

அழுகுரலும், ஓலங்களும் நிறைந்த ஒரு ஓலைக் குடிசையில் இருந்து உலகை வெல்லும் ஓங்காரமான விடுதலைக் குரலை வழங்கி விடுவது ஒன்றும் அத்தனை எளிதான செயலல்ல. ஆனால், அப்படி ஒரு குரலைத் தனது சொற்களால் கட்டமைத்து புவிப்பந்தெங்கும் வழிய விட்ட ஒரு கவிதையை நாம் இழந்து விட்டோம். இனி புதிதாக விடுதலை குறித்துச் சொல்வதற்கு அவரது பேனா முனைகள் இயங்கப் போவதில்லை. ஆனால், மாயா ஏஞ்சலோவின் பழைய இயக்கத்தில் உருவான சொற்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பயணிக்கலாம்.

மேலும்....

இஸ்லாமியர்க்கு இடஒதுக்கீடு கேள்விக்குறியா?

– கவிஞர் கலி.பூங்குன்றன்

16ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி பி.ஜே.பி. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவ வெறி பளிச்சிட்டது. தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவரான முரளி மனோகர் ஜோஷி ஆர்.எஸ்.எஸின் அறிவுரை பெற்றுதான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். (டில்லியில் பேட்டி 12.4.2014)

மேலும்....

தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை?

கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன. பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து வசதிகளையும் பெற்றுப் படிப்பவர்களுக்கு இணையாக, கிராமப்புறப் பள்ளிகளின் பிள்ளைகளும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஏழைப் பள்ளி, அரசுப் பள்ளி, கார்ப்பரேசன் பள்ளி என்று இளக்காரமாகப்  பார்த்தவர்கள், தனியார் பள்ளி பற்றிப் பெருமையாகப் பேசியவர்கள் எல்லாம் இன்று வியப்போடு பார்க்கிறார்கள். இந்த வேறுபாடுகள் நீங்கியதற்குக் காரணம் சமச்சீர் கல்வியே என்பதை இப்போதுதான் தமிழகம் உணரத் தொடங்கியிருக்கிறது.

மேலும்....