பொதுத்துறை அரசு வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா?

முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்து இயங்கிய நிலையில், நாயக் கமிட்டி என்ற ஒரு குழுவை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிலைப்பாடு, செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி ஆராய்வதற்கு அமைத்தது. அதன் அறிக்கை வெளியானது; அதில் சிகிச்சை என்பது நோயைவிடக் கொடுமையானது என்பது போல் பரிந்துரைகள் பெரிதும் அமைந்துள்ளன. அதைப்பற்றி மிகவும் விரிவாக விளக்க வேண்டியதில்லை; தற்போது நாட்டுடைமையாக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகளை, மீண்டும் தனியார் மயமாக்கி, தனியார் வங்கிகளாக்கிடவே அதற்கு […]

மேலும்....

கற்பழிப்பா? பாலியல் வன்முறையா?

பெண்ணைக் கேவலப் படுத்தும் கற்பழிப்பு என்ற சொல்லிற்கு மாற்றுச் சொற்களாக பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சி போன்ற சொற்கள் வழக்கத்தில் இருந்தும் அவற்றைப் பயன்படுத்த தமிழ் தினசரிகள் சில பிடிவாதமாக மறுக்கின்றன. குறிப்பாக தினமலரும், தினத்தந்தியும் கற்பழிப்பு என்ற சொல்லைத் தங்களின் மார்க்கெட் உத்தியாகக் கருதி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. கற்புக்கு இலக்கணமும், விஞ்ஞான விளக்கமும் வந்துவிட்ட பிறகும் இவற்றைப் பிடித்துத் தொங்குவது, பாலியல் வன்முறைக்கு ஒப்பானதாகும். இப்படிக் குறிப்பிட்டே இவை வார்த்தைகளால் பெண்களைப் பலாத்காரம் செய்கின்றன. தினசரிகள் […]

மேலும்....

கால் பந்தாட்டத்தில் கடவுளின் கையாம்

– மயிலாடன்

மூட நம்பிக்கை எல்லாத் துறைகளிலுமே உண்டு என்கிறபோது விளையாட்டுப் போட்டிகளிலும் இல்லாமற் போய்விடுமா?

உலகக் கால்பந்து போட்டி என்னும் உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் மெய்ம்மறந்துகிடந்தோம்.

கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் எங்கெங்கெல்லாம் ஆட்சிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்களோ, அந்த நாடுகளில் மட்டுமே இடம்பெறக் கூடிய சோம்பேறி விளையாட்டாகும்.

மேலும்....

வரலாற்றில் காணப்படும் வரவுகள்

தமிழக நீதித்துறையில் தலைவிரித்தாடிய  பார்ப்பனிய வல்லாண்மை

 

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

இன்றைய இந்திய நிலப்பரப்பிலும் சரி, தமிழகத்திலும் சரி, நீதித்துறையில் பல்வேறு அமைப்புகளில் பார்ப்பனர்கள் வல்லாண்மை செலுத்தி, சமயம் கிடைத்த போதெல்லாம் பார்ப்பன நீதிபதிகள் சிலர் மட்டுமே இருந்தாலும் சரி திராவிடர் _ தமிழர்களின் சமூகநீதிக்கு உலைவைக்கும் அநீதிகளைச் செய்துவருவது அனைவரும் அறிந்தது. உயர் _ உச்ச நீதிமன்றங்களில் இந்நிலை வெகுவாக பரவிக் கிடப்பதையும் பார்க்கிறோம்.

மேலும்....