ரிவர்ஸ் கியரில் அறிவியல் பாடங்கள்!

சி.என்.ஆர்.ராவ் பள்ளி மற்றும் கல்லூரி களில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்களை தற்போது எந்த இடத்திலும் பயன்படுத்துவதில்லை. பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களில் இடம் பெற்றுள்ள அறிவியல் தொடர்பான விளக்கங்கள் முன்பொரு காலத்தில் பயன்படுத்தப்பட்டவை. தற்போது அதிலிருந்து நாம் வெகுதொலைவிற்கு முன்னேறிச் சென்றுவிட்டோம். தற்போதைய நடைமுறைக்குச் சற்றும் ஒத்துவராத பழைய பாடத்திட்டங்களையே கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்து வருவதாலேயேதான் மாணவர்களுக்கு எளிதில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இது, மாணவர்களுக்கு அறிவியல் மீது வெறுப்பு ஏற்படவும் […]

மேலும்....

கவிதை வரைக

மூட பக்தியினால்மண்டை பிளக்கிறதுமனிதக் குருதி மண்ணில் வழிகிறது. -அந்த மடமைக்குதன்னையும்உடந்தையாக்கிய மனிதனையெண்ணிஉடைந்(த)தும் அழுகிறது…தேங்காய். – செங்குன்றம் ஏ.திராவிடமணி, சென்னை-_5 தேங்காயைத் தலையில்…உடைத்துக் கொள்ளும்மதியிலா மாந்தரை…உலகோர்…மாங்காய் மடையர்வரிசையில் சேர்ப்பர்!மானமுடையோர்.. செல்வரோ அங்கு? –  நெய்வேலி க.தியாகராசன்,கொரநாட்டுக் கருப்பூர் பகுத்தறிவைச் சிதறடித்துபரவசத்திலிருக்கும் பூசாரிகளே!மூடர்களுக்குள் எப்படியடா…மூளையிருக்கும்!?தேங்காயோடு சேர்ந்தேதெறிக்குது பார் களிமண்ணும்! – எஸ். சந்திரமோகன், பாளையம்பட்டி தன்னம்பிக்கை இல்லா மாந்தர்களே!தலை தாழ்ந்தே! பெறுவது தேங்காய் அடியே!சுமை இறக்கவே! தேடாதே நேர்த்திக் கடனே! – வி.மீனாட்சி, நாமக்கல் நேர்த்திக்கடன் செய்தபக்தனின் தலையில்குருதி கொட்டுதென […]

மேலும்....

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்களின் பங்கு

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது கடந்த ஆண்டு 13.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான குற்றங்கள் 70.5 விழுக்காடும் பாலியல் குற்றங்கள் 60.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் 66.3 விழுக்காட்டினர் 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள். பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2013ஆம் ஆண்டு சிறுவர்கள்மீது மொத்தம் 31,725 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, 2012ஆம் ஆண்டு 27,936ஆக இருந்துள்ளது. திருட்டு வழக்குகளில் […]

மேலும்....

தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி

ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக்கூடாதென்கிறார்கள். இப்பொழுது ஒரு சில இடங்களில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்றால், அது அரசாங்கத்தாரின் சட்ட பலத்தைக் கொண்டு. ஆனால், பொதுவாகத் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படுகிறார்களா?என்பதையும், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அதை ஆதரிக்கிறார்களா? என்பதையும் இதுசமயம் எண்ணிப் பார்க்க வேண்டும்,   ஆதிதிராவிடர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின்வாங்குவதில்லை. பிறவியில் மிருகமாய்ப் பிறந்தும், ஜாதியில் நாய் என்றழைக்கப்படுவதுமான, மலம் உண்ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக […]

மேலும்....

என்ன ஷாப்பிட்றேள்? உணவுப் பழக்கத்தில் நுழையும் மூக்குகள்

– சார்வாகன்

1916இல் தென்இந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டபோது வெளியிடப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையைக் கேலி செய்தும் இது பார்ப்பனர் அல்லாதாரின் தற்கொலைக்கான நடவடிக்கை என்றும் எழுதிய ஏடுதான் உங்கள் குரல் என்று தன் குரலைப் பதிவு செய்திருக்கிறது.

அல்லாதார் கட்சியாமே என்றும் அல்லாதார் என்று ஒரு ஜாதியே இல்லையே என்றும் ஏகடியம் எழுதியவர் ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்று ரிட் மனு போட்டுப் பாட்டு எழுதிய சி.சு.பாரதி. இன்றைக்கு 100 ஆண்டுகள் வயதும் அதற்குத் தக்க வளர்ச்சியும் பெற்றுள்ள பார்ப்பனர் அல்லாதார் சமுதாயத்தைத் தரைமட்டமாக்கும் செயல்களில் இறங்குவது பார்ப்பனர்களுக்குப் பழகிய தொழில். பார்ப்பனர் அல்லாத மக்களைக் குறிக்க அப்பிராமண என்ற சொல்லை இவர்களது வேத, சாத்திரங்கள் பயன்படுத்துவதை வசதியாக மறைத்து விடுவார்கள்.

மேலும்....