இந்தியப் பெண்களின் நிலை

இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 92 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 24,923 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013ஆம் ஆண்டில் 33,707ஆக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களில் 15,556 பேர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் வன்முறைக் குற்றத்தில் டில்லி முதல் இடத்தில் உள்ளது. டில்லியில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 பெண்கள் […]

மேலும்....

மதமற்றவர் என்று அறிவித்துக்கொள்ளும் உரிமை!

தன்னை மதமற்றவர் என்று அறிவித்திட தனி மனிதனுக்கு உரிமை உண்டு; அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்று மண்டையில் அடித்ததுபோல மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள எவரிடமும் அவர் தனது மதம்பற்றிக் குறிப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது என்ற திட்டவட்டமான தீர்ப்பு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றம் 23.9.2014 அன்று அளித்து வரலாறு படைத்துள்ளது! கிறித்துவ மதப் பிரிவில் ஒன்றான Full Gospel Church of God […]

மேலும்....

மங்கள்யான் வெற்றி மனித நேயம் தோல்வி!

24.9.2014 அன்று காலை சரியாக 7.42 மணிக்கு மங்கள்யான் (செவ்வாய்க்கலன்) உலகில் யாராலும் செய்ய முடியாத சரித்திரச் சாதனையாக முதல் முயற்சியிலேயே செவ்வாய் கோளின் நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்பதை நம்முடைய இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி ஆய்வு மய்யத்துக்கு ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விண்வெளி தகவல் தொடர்பு நிறுவனம் கண்டுபிடித்துத் தெரிவித்தது.

மேலும்....

பெரியாரும் காந்தியும்!

– கி.தளபதிராஜ்

பெரியாரும் காந்தியும்!

தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் தனிமனிதராக பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர். ஈரோடு நகரமன்றத் தலைவராக அவர் செயலாற்றி வந்த காலத்தில் 1920இல் காந்தியாரால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது.

மேலும்....