சொல்றாங்க!

பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச விரும்புகிறதா அல்லது இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுடன் பேச விரும்புகிறதா? இதுபற்றிய தெளிவான முடிவை எடுக்காதவரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை. – அருண் ஜெட்லி, மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஷ்மீர் மக்கள் இந்தியப் பிரிவினைவாதிகள் அல்ல. தங்கள் உரிமைக்காகப் போராடும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள். மக்கள் தங்கள் சுயமான முடிவுகளை எடுப்பது என்பது அய்.நா.தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்-பட்டது. இந்தப் பிரச்சினையில் பாகிஸ்தான் […]

மேலும்....

கருத்து

முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் விவாதம் இல்லாமல் பார்லிமெண்டில் நிறைவேற்றப்படுவது சரியல்ல. நிதி மசோதா போன்ற முக்கியமான மசோதாக்கள் மீது அதிக நேரம் விவாதம் நடப்பதற்கான வழிமுறைகளை மக்களவை அவைத்தலைவர் சபாநாயகர் கண்டறிய வேண்டும். திட்டங்களுக்குப் பணத்தை ஒதுக்கும்போது, வரிகள் விதிக்கும்போது குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி விவாதிப்பது அவசியம். – பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர் ————– மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி. ஆனால், பதவியேற்பு விழாவில் […]

மேலும்....

அய்வருக்குத் தூக்கா?

2011 நவம்பர் 28 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து  712 விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன. அன்றிரவு கச்சத்தீவு அருகே நூற்றுக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சன், அகஸ்டஸ், லாங்நைட் ஆகியோரைச் சிறைப் பிடித்துச் சென்றனர். பிடித்துச் சென்றபோது இலங்கைக் கடற்படை சார்பில் எல்லை கடந்ததாக உங்களைக் கைது செய்து இலங்கை காவல்துறையிடம் ஒப்படைப்பதாகத்தான் தெரிவிக்கப்பட்டது, இது […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் அரசர்கள்தான் பார்ப்பனர்களுக்கு அக்கிரகாரங்களை ஏற்படுத்தித் தந்து பார்ப்பனர்களை ஆலோசகர்களாகவும் தளகர்த்தர்களாகவும் நியமித்துக் கொண்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

பெண்ணடிமை

ஈரான் நாட்டில் பெண்கள் கைப்பந்து (வாலிபால்) விளையாட கடந்த 2012ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. பெண்கள் கைப்பந்து விளையாடினால் அவர்களை அநாகரிகமாக நடந்துகொள்ளும் ஆண் பார்வையாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது என ஈரான் அதிகாரிகள் கூறினர்.

மேலும்....